சொடக்கு போடும் நேரத்தில் புளி சாதம் தயார். நீங்க பேச்சுலரா இருந்தா இந்த ‘புளியோதரை பொடி’ ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

pulisadam
- Advertisement -

இந்தப் பொடியை மட்டும் உங்க வீட்ல அரைச்சு வச்சுகிட்டா போதும். சொடக்கு போடுற நேரத்துல புளிசாதம் செய்து விடலாமே. ஆனால் அதற்கு கட்டாயமாக சாதம் வடித்து வைத்து இருக்க வேண்டும். வடித்த சாதம் இருந்தால் நிமிடத்தில் இந்த பொடியை வைத்து ஒரு புளி சாதத்தை தயார் செய்துவிடலாம். குறிப்பாக நீங்கள் பேச்சிலராக இருந்தால் உங்களுக்கு இது மிகமிக உபயோகமானதாக இருக்கும்.  பேச்சிலர்ஸ்கு மட்டும்தானா? இல்லத்தரசிகளுக்கு இல்லையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். யார் வேண்டும் என்றாலும் இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம். இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி எப்படி அரைப்பது. இந்த இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியை வைத்து புளி சாதத்தை எப்படி தயார் செய்வது. நேரத்தைக் கடத்தாமல் தெரிந்துகொள்வோமா.

pulisadam3

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். கடாய் சூடானதும் கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், வரமல்லி – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், எள்ளு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 8 லிருந்து 10, இந்தப் பொருட்கள் அனைத்தையும் மிதமான தீயில் 3 நிமிடங்கள் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (எண்ணெய் ஊற்றாமல் இந்த பொருட்களை டிரை ஆகவே வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

வருத்த இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சி ஜாரில் போட்டு, இந்த பொருட்களுடன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடி மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.

pulisadam4

அடுத்தபடியாக கேஸ் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 100 கிராம் அளவு புளியை எடுத்து ஒரு இடுக்கியில் பிடித்துக் கொள்ளுங்கள். புளியை அப்படியே நெருப்பில்  காண்பித்து சுடவேண்டும். ஒரு நிமிடம் போல சுட்டால் போதும். நெருப்பில் வாட்டிய இந்த புளியை சிறு சிறுத் துண்டுகளாக பிச்சு எடுத்து, மிக்ஸி ஜாரில் ஏற்கனவே பொடியை அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா அதில் போட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஓட விடுங்கள். அந்த சுட்ட புளியும் பொடியுடன் சேர்ந்து, நன்றாக மைய அரைத்து விடும். இப்போது நமக்கு புளியோதரை பொடி தயாராக உள்ளது. இதை காற்று புகாத தண்ணீர் இல்லாத ஒரு டப்பாவில் மாற்றிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இறுதியாக ஒரு கடாயில் 100 கிராம் அளவு வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுத்து, ஆறவைத்து தயாராக இருக்கும் புளியோதரை பொடியுடன், வறுத்த வேர்கடலைகளை கொட்டி கலந்து விட்டுவிடுங்கள். இந்தப் பொடியை காற்றுப்புகாத மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் 3 லிருந்து 4 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

pulisadam2

சரி, அடுத்து இந்த புளியோதரை பொடியை வைத்து எப்படி புளி சாதம் தாளிப்பது அதையும் தெரிஞ்சுக்கோங்களேன்.

1 கப் அளவு வடித்த சாதத்தை ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாதம் அப்படியே இருக்கட்டும். (சாதத்தில் கொஞ்சம் உப்பு சேர்த்து வடித்துக் கொள்ள வேண்டும்).

pulisadam5

அடுத்தபடியாக ஒரு தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி அது நன்றாகக் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 1 போட்டு தாளித்து, இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நாம் அரைத்து வைத்திருக்கும் புளியோதரை பொடியை போட்டு ஒரு நிமிடம் போல வதக்கி அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த தாளிப்பை தயாராக எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் கொட்டி நன்றாக கலந்து தேவைப்பட்டால் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் கழித்து, இந்த புளி சாதத்தை நீங்களே சுவைத்துப் பாருங்கள். பேச்சுலர் புளியோதரை பொடி ரகசியம் என்ன என்பது உங்களுக்கே புரியும்.

- Advertisement -