பழைய அழுக்குப் பிடித்த ஸ்கூல் பேக், ஹேண்ட் பேக் இவைகளை புதுசு போல மாற்ற, ஒரு வாட்டி இப்படி துவைச்சு பாருங்களே! அடிக்கடி புதுபேக் வாங்கி காசை வீணடிக்க மாட்டீங்க.

bag
- Advertisement -

குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்கூல் பேக் ஆக இருந்தாலும் சரி, பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட்பேகாக இருந்தாலும் சரி, ஆண்கள் பயன்படுத்தும் பேக் ஆக இருந்தாலும் சரி, தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பேக் எல்லாம், அதிகப்படியான அழுக்கு படிந்த தான் இருக்கும். இதை சுலபமாக துவைத்து விட முடியாது. துவைத்தாலும் கொஞ்சம் பிசுபிசுப்பு இருக்கத்தான் செய்யும். இதற்காக நிறைய பேர் பழைய பேக்குகளை துவைத்து பயன்படுத்தாமல், அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, புதியதாக பேக் வாங்கி பயன்படுத்துவார்கள். செலவுகளை மிச்சப்படுத்த பழைய பேக்குகளை எப்படி புதுசு போல மாற்றுவது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bag2

உங்களுடைய பேக் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சோடா உப்பு 2 ஸ்பூன், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 1/4 கப், எலுமிச்சை பழச்சாறு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கடுமையான அழுக்குகளை கூட சோடா உப்பு எளிதில் ஊறவைத்து நீக்கிவிடும். தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவை சேர்ப்பதால் நீங்கள் பயன்படுத்தும் பேக் வண்ணம் மாறாமல் இருக்கும். எலுமிச்சை பழச்சாறு விடாப்பிடியான கறைகளை நீக்கும்.

- Advertisement -

எலுமிச்சை பழச்சாறு பதிலாக நீங்கள் வினிகரும் சேர்த்து கொள்ளலாம். உங்கள் பேக் ரொம்பவும் பிசுபிசுப்புத் தன்மையோடு இருந்தால், துணி துவைக்கும் லிக்விட் அல்லது சோப்பையும் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

bag1

நீங்கள் ஒரு பேக் துவைத்தால், ஒரு எலுமிச்சை பழச்சாறு முழுவதையும் அந்த தண்ணீரில் சேர்க்கலாம். தவறு கிடையாது. இந்த தண்ணீரில் உங்களது பேகை மூழ்க வைத்து இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவேண்டும். என்னதான் அழுத்தி விட்டாலும், பேக் தண்ணீரில் முழுமையாக மூழ்காது. மேலே எழத்தான் செய்யும். அதன் மேலே ஒரு எடை அதிகமாக உள்ள பொருளை வைத்து விடுங்கள். பேக் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும். அப்போதுதான் அழுக்கு சுத்தமாகும்.

- Advertisement -

இரண்டு மணி நேரம் கழித்து பேகை ஊறவைத்த தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து, சாதாரணமாக நாரை போட்டு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்து எடுத்தால் அதில் இருக்கும் அழுக்கு பிசுபிசுப்பும் மொத்தமாக வெளியேறி விடும். அதன் பின்பு இரண்டு முறை நல்ல தண்ணீரில் அலசி எடுத்து வெயிலில் காய வைத்து எடுத்தால் போதும். உங்கள் பேக் புத்தம் புதுசா மாறி இருக்கும்.

napthelin-balls

காயவைத்த பேகுகளுக்கு உள்ளே ஒரு பூச்சி கற்பூரத்தை போட்டு விட வேண்டும். துவைத்த இந்த பேகை கேரி பேகில் போட்டு, கட்டி எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். எப்போது தேவைப்படுகிறதோ அந்த சமயத்தில் உடனடியாக இந்த பேக்கை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

bag3

நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பேகிலிருந்து வரும் கெட்ட வாடையை இந்த பூச்சி கற்பூரம் தவிர்த்து விடும். பழைய பேகை வீணாக்காதீர்கள். இப்படி துவைத்து பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி புது ஹேண்ட்பேக், புது ஸ்கூல் பேக், வாங்காமல் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

இதையும் படிக்கலாமே
காலண்டரில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா? இந்த நாட்களில் எதை செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -