தினம் தினம் வெற்றியை தேடித்தரும் பைரவர் போற்றி

bairavar

சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவமாக விளங்கும் கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது அஷ்டமி. அந்த நன் நாளின் காலபைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சார்த்தி கீழே உள்ள 108 போற்றியை கூறுவதன் பயனாக நாம் செய்யும் வேலைகள் வெற்றிபெறும். துன்பங்கள் அகன்று இன்பம் பெருகும்.

kaala bairavar

பைரவர் 108 போற்றி

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி

ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக்காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
ஓம் உக்ர பைரவனே போற்றி

ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

- Advertisement -

ஓம் எல்லை தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வ பங்கனே போற்றி

ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறனே போற்றி
ஓம் கட்வாங்க தாரியே போற்றி

ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர் தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

bairavar

ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

ஓம் சண்ட பைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி

ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி

ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி

ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீது அழிப்பவனே போற்றி
ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரச ரூபனே போற்றி
ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி

ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையளிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி

swarna bairavar

ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி

ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதங்களின் நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி

ஓம் மகோதரனே போற்றி
ஓம் மகா பைரவனே போற்றி
ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
ஓம் மகா குண்டலனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி

kaala bairavar

ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி

ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

இந்த 108 போற்றியை அஷ்டமி அன்று உங்கள் வீட்டிலேயே கூட சொல்லலாம். கோவில்களுக்கு செல்பவர்கள் கூட்டாக சேர்ந்து இதை சொல்லலாம்.

kaala bairavar

இதையும் படிக்கலாமே:
ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்

பயங்கள் அனைத்தையும் போக்குபவர் பைரவர் ஆவார். இந்த மந்திரத்தை வாரத்தின் அனைத்து நாட்களிலும் கூறி வழிபடலாம். அதிலும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவர் வழிபாட்டிற்குரிய நேரமான மாலை 4.30 முதல் 6.00 குள்ளாக நெய்தீபங்கள் ஏற்றி, செவ்வரளி பூக்களை பைரவருக்கு சமர்ப்பித்து, இந்த 108 போற்றிகளை கூறி வழிபட நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கும். நீங்களும் உங்கள் குடும்பமும் பைரவரினால் அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.

இந்த உலகில் எவ்வுயிர்களும் எதற்கும் அஞ்சாமலிருந்ததில்லை. அதிலும் மனிதர்களுக்கு சில விடயங்களில் பயம் ஏற்படுகின்ற போது, சக மனிதர்களை நம்புவதை விட இறைவனிடமே தங்களை காத்தருளுமாறு சரணாகதி அடைகின்றனர். அப்படி தன்னை நம்பி தன்னிடம் முழுமையாக சரணாகதி அடையும் பக்தர்களை அவர்களின் அனைத்து விதமான துன்பங்களை போக்கி, அவர்களை காத்தருள்பவர் தான் பைரவமூர்த்தி. சிவபெருமானின் மற்றொரு வடிவமான பைரவரை நாம் உண்மையான பக்தியுடன் வழிபட எல்லாம் நன்மையாக முடியும்.

இது போன்ற மேலும் பல மந்திரம், ஆன்மீக கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

English Overview:
Here we have Kalabhairava 108 potri in Tamil lyrics or Kala Bairavar 108 potri in Tamil lyrics. Bhairava 108 potri in Tamil needs to be chanted during theipirai ashtami days.