9 பௌர்ணமிகள் இதை வைத்து பைரவரை வழிபட்டால் வறுமை ஒழிந்து செல்வம் செழிக்குமாம்!

bairavar-payasam

கலியுகக் கடவுளாக விளங்கும் பைரவரை வழிபட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இவரிடம் ஒரு வரத்தை கேட்டால் அது ஒரே மாதத்தில் நிகழ்ந்து விடும் என்பது அதிசயப்படுத்தும் ஒரு விஷயமாகும். உண்மையிலேயே கலியுகத்தின் காக்கும் கடவுள் காலபைரவர் ஆவார். இவருக்கு இந்த ஒரு பொருளை நைவேத்யம் படைத்து ஒன்பது பௌர்ணமிகள் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kala-bairavar

பரணி நட்சத்திரத்தில் அவதரித்த பைரவரை பரணி நட்சத்திரகாரர்கள் வழிபட்டு வர வாழ்வில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. பைரவருக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் அப்படியே கிடைக்கும். பவுர்ணமி அன்று செய்ய வேண்டிய இந்த பரிகாரத்தை முறையாக பைரவருக்கு நாம் செய்து வந்தால் நம் வாழ்வில் இருக்கும் வறுமை நீங்கி தொழில் தடை, வியாபார தடை, உத்தியோக தடை, வருமானத்தடை ஆகிய அத்தனை தடைகளும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும். அதை எப்படி செய்வது? என இனி வரும் பத்தியில் படிப்போம்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வீட்டில் இரவு நேரத்தில் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். முதல் பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து அவல் பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும். பால், தேன், பழம், உளுந்து வடை ஆகியவற்றையும் படைக்கலாம். ஒன்பது பவுர்ணமிகளிலும் அவல் பாயாசத்தை கட்டாயம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். அவல் பாயாசம் பைரவருக்கு மிகவும் பிடித்தது ஆகும்.

பைரவருக்கு அர்ச்சனை செய்ய வில்வ இலைகள் பயன்படுத்த வேண்டும். சிவனின் ஸ்வரூபமாகவே பைரவர் பார்க்கப்படுகிறார் எனவே வில்வ இலைகளால் அவர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் பொழுது பைரவர் உடைய மூல மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

பைரவர் ஸ்வர்ணாகர்ஷண பைரவராக இருப்பதால் வெள்ளி அல்லது திங்கட் கிழமைகளில் சந்தியா கால வேளையில் பைரவாஷ்டகம் படிப்பது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அஷ்டகத்தை வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு பதினெட்டு முறை பௌர்ணமிகளில் வாசிக்க வேண்டும். இப்படி செய்து வர குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி செல்வ செழிப்பும் உண்டாகும்.

swarna-bairavar3

தொழில் விருத்தி பெற ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபடுவது, பகைவர்கள் தொல்லை நீங்க கால பைரவரை வழிபடுவது சிறந்த பரிகாரமாக அமைகிறது. பவுர்ணமி அன்று பைரவரை இவ்வாறு வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கி முன்னேற்றத்தை அடையலாம். 64 பைரவர்கள் 64 விதமான பலன்களை பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். இவருக்கு உகந்த செவ்வரளி மலர்களை அர்ச்சனை செய்து மிளகு தீபம் ஏற்றி வந்தால் கடன் தொல்லைகள் தீரும் என்பதும் ஐதீகம் உண்டு.

sani-baghavan

பைரவர் சன்னிதியில் பைரவாஷ்டகம் படிப்பது துன்பத்தை நீக்கும். பைரவர் சனி பகவானுடைய குருவாக இருப்பதால் சனி தோஷம் இருப்பவர்களும், சனிபகவானால் ஏற்படும் பிரச்சனைகள் தீரவும் பைரவரை வழிபடலாம். சனி தோஷம் நீங்க சிவபெருமானையும், பைரவரையும் வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். 8 பவுர்ணமிகள் முடிந்தும் ஒன்பதாவது பவுர்ணமியில் பைரவர் சன்னிதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வாருங்கள். இதனால் துன்பங்கள் தொலைந்து கஷ்டங்கள் கரைந்து ஒளிமயமான வாழ்வு பிறக்கும் நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.