பேக்கரி ஸ்டைல் பால்கோவா ரொம்ப ஈஸியா, அதுவும் ரெண்டே பொருளை வைச்சு, வீட்டிலயே எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா? வாங்க எப்படின்னு செய்து பாத்துடலாம்.

- Advertisement -

இனிப்பு பலகாரங்களில் அனைவருக்கும் பிடித்தமானது பால்கோவா. பால்கோவாவில் பல வகைகள் உண்டு. நாம் சிறு வயதில் அதிகம் வாங்கி சாப்பிட்ட பேக்கரி பால்கோவா எல்லோருக்கு ஞாபகம் இருக்கும். இந்த பால்கோவாவின் சுவை மற்ற பால்கோவாக்களை விட வித்தியாசமாக இருக்கும். அதே நேரத்தில் எவ்வளவு சாப்பிட்டாலும் தெவிட்டாமலும் இருக்கும். ஏனெனில் இதில் மணம் வருவதற்காகவும், சுவையாகவும் அதிகமாக எந்த பொருளையும் சேர்த்து செய்வதில்லை. இனி அந்த பால் கோவாவிற்காக பேக்கரி பேக்கரியாக நீங்கள் ஏறி இறங்க வேண்டாம். இதோ இரண்டே பொருளை வைத்து மிக மிக எளிமையாக உங்கள் வீட்டில் செய்து சாப்பிடலாம். வாங்க அது எப்படின்னு பதிவுக்குள்ள போய் தெரிஞ்சிக்கலாம்.

தேவையான பொருள்: சர்க்கரை – 200, கிராம்,பால் – 1 லிட்டர், பால் நல்ல கெட்டியாக இருக்க வேண்டும்). ஃபுல் க்ரீம் மில்க்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு லிட்டர் பாலை அதில் சேர்த்து பாலை கொதிக்க விடுங்கள். ஒரு லிட்டர் பால் அரை லிட்டர் பாலாக வற்றும் வரை அடுப்பில் பால் நன்றாக கொதிக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பாலை கை விடாமல் கிண்டி கொண்டே இருங்கள். அடுப்பை சிம்மில் வைத்து கிண்டி விடுங்கள்.

இதில் 200 கிராம் சர்க்கரையும் சேர்த்து இந்த பாலை கைவிடாமல் கிண்டி கொண்டே இருங்கள். சிறிது நேரம் விட்டு விட்டால் கூட இது அடி பிடித்து விடும். ஏனென்றால் இதில் நாம் நெய், எண்ணெய் போன்ற எந்த ஒரு பொருளையும் சேர்க்கவில்லை. எனவே கைவிடாமல் கிளறிக் கொண்டு இருப்பது மிகவும் முக்கியம். (விருப்பப்பட்டால்) இதில் கொஞ்சமாக பாதாம் துருவி சேர்த்து கொள்ளுங்கள். ஒரு 10 அல்லது 15 நிமிடம் இப்படி கிளறிக் கொண்டே இருந்தால் பாலும் சர்க்கரையும் நன்றாக கலந்து பால்கோவா பதம் வந்துவிடும்.

- Advertisement -

இதில் முக்கியமான இரண்டு விஷயம் ஒன்று தண்ணீர் ஊற்றாத ஃபுல் க்ரீம் மில்காக இருக்க வேண்டும். இரண்டாவது பால் பாதியளவு சுண்டிய பிறகு கைவிடாமல் கிளற வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் ஏலக்காய் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் ஒன்றும் தவறில்லை இதன் சுவையே அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான அதே நேரத்தில் சட்டுன்னு செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் திணை தக்காளி சாதம். அது எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இனி வரும் பண்டிகை நாட்களில் மெனக்கெட்டு அதிக நேரம் செலவழித்து, இனிப்புகளை செய்வதை விட இப்படி சுவையாகவும் அதே நேரத்தில் சீக்கிரமாகவும் செய்து முடிக்கும் பலகாரங்களை செய்து நேரத்தையும் மிச்சப்படுத்தி, பணத்தையும் மிச்சப்படுத்தி உங்கள் வீட்டில் விசேஷங்களை இன்னும் சிறப்பாக கொண்டாடுங்கள்.

- Advertisement -