ஆரோக்கியமான அதே நேரத்தில் சட்டுன்னு செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் திணை தக்காளி சாதம். அது எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

- Advertisement -

உடல் ஆரோக்கியம் என்பது தொடங்கும் இடமே நம் உணவு பழக்க வழக்கங்களில் தான். நாம் உண்ணும் உணவை சரியான அளவில் சரியான சத்தான பொருட்களாக எடுத்துக் கொண்டாலே போதும். பல நோய்கள் வருவதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதெல்லாம் உணவு என்பதை அந்த நேரத்திற்கு பசியாற்றிக் கொள்ள ஏதோ ஒரு உணவு என்ற வகையில் தான் சாப்பிடுகிறோம்.

நம் உடலுக்கு என்ன நல்லது, எது வியாதி வராமல் தடுக்கும், என்கிற கேள்வியோ யோசனையோ யாருக்கும் கிடையாது. சரி இனியும் அதை பற்றி யோசித்து சாப்பிடவே வேண்டாம். ஆனால் நீங்கள் மூன்று வேளை உண்ணும் உணவில் ஒரு வேலையாவது திணை வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே போதும் நீங்கள் உங்கள் நலனை பற்றி யோசிக்கவே தேவையில்லை. ஏனெனில் ஒவ்வொரு திணை வகையிலும் அத்தனை ஆரோக்கியம் நிறைந்து உள்ளது. அப்படி ஒரு ஆரோக்கியமான தினை தக்காளி சாதத்தை தான் இப்போது நாம் எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்: தினை – 1 கப் , பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6,பூண்டு பல் -10, இஞ்சி – 1துண்டு, நெய் – 1 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சோம்பு – 1 ஸ்பூன், வெல்லம் – 1 சிறிய கட்டி.

முதலில் திணையை எடுத்து நன்றாக அலசி ஒரு கப்பில் அரைமணி நேரம் ஊற வைத்து விடுங்கள். வெங்காயத்தை நல்ல நீளவாக்கில் அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். பச்சை மிளகாய் கீறி வைத்து, இஞ்சி பூண்டுயை ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பைப் பற்றி வைத்து ஒரு குக்கர் வைத்து விடுங்கள். குக்கர் சூடானதும் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் இரண்டையும் ஊற்றி விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கொஞ்சம் சோம்பு சேர்த்து பொரிந்த உடன் அறிந்து வைத்த வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கி கொள்ளுங்கள். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து கருவேப்பிலையும் சேர்த்து வதக்கிய பிறகு தக்காளியும் இதில் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். கீறி வைத்த பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் போதும்.

இதையும் படிக்கலாமே: 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத காரசாரமான இந்த வெங்காய கார சட்னியை ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க. இதன் ருசி நாக்கை விட்டு போகவே போகாது.

இவை எல்லாம் வதக்கிய பிறகு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் ஊற வைத்துள்ள திணை, வெல்லம் சேர்த்த பின் ஒரு முறை நன்றாக கலந்து விட்ட பிறகு குக்கரை மூடி விடவும். மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் இறங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை சாதத்தை நன்றாக கலந்து விடுங்கள். இது நாம் சாதாரணமாக செய்யும் சாதங்களைப் போல தனியாக வராது சற்று குழைந்தது போல தான் இருக்கும். ஆனால் இதை செய்து கொடுப்பதன் மூலம் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவை செய்த திருப்தி உங்களுக்கும், ஆரோக்கியமான ஒரு உணவை சாப்பிட்ட திருப்தி உண்பவருக்கும் ஏற்படும்.

- Advertisement -