கிரக தோஷங்களை நீங்கி முகத்தில் தேஜஸ் ஒளிர உதவும் மந்திரம்

bala-tiripura-sundhari

நாம் கேட்டதை தரும் சக்தி வாய்ந்த தெய்வமாக வணங்கப்படுகிறாள் பாலா திரிபுரசுந்தரி. அன்னை ஆதிபராசக்தி தன் விருப்பப்படி எதுத்துக்கொண்ட குழந்தை வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. குழந்தை வடிவில் இருக்கும் அன்னை தன்னை வணங்குவோருக்கு குறைவில்லாத செல்வம், நல்ல ஆரோக்கியம், எதிலும் வெற்றி என பல நல்ல பலன்களை அருள்பவள். பாலா திரிபுரசுந்தரி சுந்தரியை மனதார வணங்கி அவளுக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக கிரக தோஷங்கள் நீங்கும், முகத்தில் தேஜஸ் கூடும் என்பது நம்பிக்கை. இதோ பாலா திரிபுரசுந்தரிக்கான மந்திரம்.

bala tiripurasundhari

பாலா திரிபுரசுந்தரி மந்திரம் :
அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா.

பொது பொருள்:
காலை சூரியனை போன்ற சிவந்த நிறத்தை கொண்டவளும், எப்பொழுதும் குருணையை பொழிபவளும், ஒரு கையில் புத்தகத்தையும், மறு கையில் ஜெபமாலையையும், மீதமுள்ள கரங்களில் அருளாசியை பொழிபவளும், விரிந்த தாமரையில் வீற்றிருப்பவளுமான பாலா திரிபுரசுந்தரி தேவியே உங்களை வணங்குகிறேன்.

இதையும் படிக்கலாமே:
தொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜபிப்பது சிறந்தது. தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஜபிக்கலாம். இந்த மந்திரத்தை கர்பிணி பெண்கள் ஜபித்தால் சுகப்பிரசவம் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.