தொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்

dhurgai2

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர் படாத பாடு பட வேண்டி இருக்கும். தொழிலில் தடை, திருமண தடை, புத்திர பாக்கியம் அடைவதில் தடை என பல பிரச்சனைகள் இருக்கும். இந்த தடைகள் அனைத்தும் விலக சிறந்த வழி துர்க்கையை வழிபடுவதே. துர்காதேவியை வழிபடும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை கூறுவது சிறந்தது. இதோ அந்த மந்திரம்.

dhurgai

துர்கை காயத்ரி மந்திரம்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

பொது பொருள்:
ஓம், சிம்மத்தை வாகனமாக கொண்டவளே, மனிதர்கள் செய்யும் பாவனைகளை மன்னிக்கும் நாயகியே என்னை காத்தருள வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்

செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் துர்காதேவியை வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக ராகு தோஷத்தால் உங்கள் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகி தொழில் ஏறுமுகமாக இருக்கும். நீண்டகாலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும்.