இத மட்டும் உங்க முகத்துல ஒருவாட்டி போட்டு பாருங்க! ப்ளீச் பண்ண மாதிரி உங்க முகம் அப்படியே பலபலன்னு ஜொலிக்கும். வெறும் 10 நிமிஷத்துல!

face8

சிலர் கெமிக்கல் கலந்த பொருட்களை வைத்து முகத்தை ப்ளீச் பண்ண பின்பு அப்படியே வெள்ளை அடித்தது போல பளிச்சென்று முகமானது மாறிவிடும். ப்ளீச் செய்தது போலவே நம்முடைய முகம் இருக்கும் ஆனால் கெமிக்கல் கலக்காமல் நம்முடைய முகத்தை எப்படி உடனடியாக வெள்ளையாக மாற்றுவது? ப்ளீச் செய்து வரக்கூடிய அந்த வெள்ளை நிறத்தை எப்படி நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முற்றிலும் இயற்கையான பொருட்களை வைத்து ஒரு ஃபேஸ் பேக் எப்படி செய்வது பார்த்து விடலாமா?

face9

இதற்கு தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – 1, தக்காளி பழச்சாறு – 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் – 1 ஸ்பூன், உங்களுடைய வீட்டில் பால் பவுடர் இருந்தால் – 1 ஸ்பூன், அப்படி இல்லை என்றால் கடலை மாவு – 1 ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம். பால் பவுடர் இருந்து சேர்த்தால் நமக்கு ரிசல்ட் இன்னும் கூடுதலாக தெரியும்.

மிகவும் பெரிய வாழை பழமாக இருந்தால் இரண்டாக வெட்டி கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் வாழைப்பழத் தோலை நீக்கிவிட்டு, அதை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைத்து, ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். அந்த வாழைப்பழ விழுதோடு தக்காளி பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, தேன், தயிர், பால் பவுடர் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு நமக்கு கிடைக்கும்.

banana

இந்த பேஸ்ட்டை முகம் கை கால் கழுத்தில் இருக்கும் கருநிறம் என்று உங்களுக்கு எந்த இடம் எல்லாம் வெள்ளையாக வேண்டுமா அந்த இடத்தில் எல்லாம் நன்றாக தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள். இது அப்படியே காயட்டும். அவ்வளவு சீக்கிரமாக இது காயாது. 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் வரை கட்டாயம் எடுக்கும் பரவாயில்லை.

கடலை மாவை இந்த கலவையோடு சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரமே உலர்ந்து விடும். பால் பவுடர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால் நிச்சயம் ஃபேஸ் பேக் காய்வதற்கு 40 நிமிடங்கள் எடுக்கும். 40 நிமிடங்கள் கழித்து உங்களது முகத்தை குளிர்ந்த தண்ணீரை வைத்து பொறுமையாக கழுவி துடைத்து பாருங்கள். உங்களது முகம் எப்படி பளபளப்பாக இருக்கும் என்று! நிச்சயமாக நீங்கள் இருந்த வண்ணத்திற்கு இப்போது இருக்கக்கூடிய நிறத்திற்கும் இரண்டு படி வித்தியாசத்தை உங்களால் பார்க்க முடியும்.

face10

அந்த அளவிற்கு எஃபெக்ட் உள்ள ஒரு ஃபேஸ் மாஸ்க் தான் இது. முற்றிலும் இயற்கையான முறையில் தயார் செய்தது, நம் கையாலேயே தயார் செய்தது. உங்களுடைய முகத்தில் எலுமிச்சை பழச்சாறை சேர்த்தால் லேசாக அரிப்பு எடுக்கும் என்றால் உங்களுடைய ஸ்கின் ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருந்தால், எலுமிச்சம் பழச்சாறை தவிர்த்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.