பழுத்துப் போன வாழைப்பழத்தை இனி தூக்கி குப்பையில் போடாதீங்க. தலை முடிக்கு இப்படி யூஸ் பண்ணா நிறைய காசு மிச்சப்படுத்தலாம்.

hair8
- Advertisement -

முடி ரொம்பவும் ட்ரையாக சிக்கு பிடித்தது போல் இருந்தால் அந்த முடியை ஷைனிங் ஆக்குவதற்கு பியூட்டி பார்லருக்கு சென்று நிறைய காசு செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படி இல்லை என்றால் நிறைய காசு கொடுத்து ஷாம்பூ, கண்டிஷனரை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் நிறைய செலவு இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

 

- Advertisement -

இந்தப் பேக்குக்கு நமக்குத் தேவையான பொருட்கள் 3. பழுத்த வாழைப்பழம், திக்கான தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய். எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் அதை இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாழைப்பழம் நல்ல பழுத்த வாழைப்பழம் ஆக இருக்க வேண்டும்‌. தோல் நன்றாக கருத்து இருக்க வேண்டும். சாதாரணமாக சாப்பிடும் அளவிற்கு பழுத்த வாழைப்பழத்தை பயன்படுத்துவதன் மூலம் அவ்வளவு பெரிய பலன் கிடைக்காது.

ஒரு மிக்ஸி ஜாரில் தோலுரித்த பழுத்த வாழைப்பழம் – 1, திக்கான தேங்காய்ப்பால் – 1/4 கப், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து விழுது போல் அரைத்து தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பேக்கில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து பேக்கை மயிர் கால்களில் படும்படி அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த பேக்கை ஜென்டிலாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக் தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கலாம். சளி பிடிக்கும் என்ற பிரச்சனை இருக்காது. அதன்பின்பு மைல்டான ஷாம்பு போட்டு உங்களுடைய தலையை அலசிக் கொள்ளுங்கள். முதல்முறை இந்த பேக்கை பயன்படுத்தும்போது உங்களுடைய தலைமுடி சில்கியாக, சிக்கு இல்லாமல் இல்லாமல் இருப்பதை உணர முடியும். ரொம்பவும் சிக்கு அதிகமாக உள்ளது. முடிவு ட்ரையாக உள்ளது என்பவர்கள் தொடர்ந்து 2 நாள் விட்டு, ஒரு நாள் இந்த பேக்கை 5 முறை போட்டு பாருங்கள். உங்களுடைய மூடி அப்படியே தலைகீழாக மாறிவிடும். (சாதாரணமாக வாரம் 1 முறை இந்த பேக்கை போட்டால் கூட போதும்.)

முதல் முறை இந்த பேக்கை பயன்படுத்தும் போது உங்களுக்கு ரிசல்ட் என்னவென்று தெரிந்துவிடும். தேங்காயில் இருக்கும் ஊட்டச்சத்து நம்முடைய முடிக்கு நிறைய பலன்களைக் கொடுக்கிறது. பொடுகு வராமல் தடுக்க, முடி வேர்க் கால்களில் உள்ள முடியை ஸ்ட்ராங்காக வளரச் செய்ய, வறட்சியை குறைக்க தேங்காய்ப்பால் அற்புதமான ஒரு மருந்து. இதேபோல முடிக்கு மட்டும் மேலே தேங்காய்ப்பாலை போடாமல் முடிந்தவரை எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கொஞ்சம் தண்ணீராக தேங்காய் பாலை உள்ளுக்கும் குடித்து வாருங்கள். அதுவும் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

இந்த பேக்கை அரைத்த உடனேயே தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இதனுடைய நிறம் லேசாக கருப்பு நிறத்திற்கு மாற தொடங்கும். பிரிட்ஜில் வைத்து எல்லாம் இந்த பேக்கை அடுத்த நாள் பயன்படுத்தக்கூடாது. உங்களுடைய முடியின் அளவுக்கு ஏற்ப இதில் சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கூடவோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம். அதன் மூலம் எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுக்கு இந்த பேக் படிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -