குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். 7 நாட்களில், 7 வயதை குறைத்து காட்டலாம். முகச்சுருக்கத்தை நீக்க இதைவிட எளிமையான வழி வேறு இல்லை.

face3
- Advertisement -

வயதானால் தான் சில பேருக்கு முகத்தில் சுருக்கம் விழும். ஆனால் சில பேருக்கு இளமையாக இருக்கும் போதே தோல் சுருக்கமாக காணப்படும். இளமையாக இருந்து முகச்சுருக்கம் ஏற்பட்டாலும் இந்த குறிப்பை பின்பற்றலாம். வயதான பின்பு வரக்கூடிய சுருக்கத்தை குறைக்கவும், முதுமையை கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போடவும் இந்த குறிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். மிக மிக எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பேக்கை எப்படி தயார் செய்வது. எளிமையான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

முகச்சுருக்கம் நீங்க பேக் தயார் செய்யும் முறை:
இந்த பேக்கை தயார் செய்ய நமக்கு வாழைப்பழ தோல் 1, அரிசி 2 ஸ்பூன், தண்ணீர் 200 ml, கான்பிளவர் மாவு 1 டேபிள் ஸ்பூன், பால் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 1 ஸ்பூன் தேவை. உங்களுடைய சருமத்துக்கு எலுமிச்சம் பழச்சாறு சேராது என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் 200 ml, தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். வாழைப்பழத் தோலை நன்றாக கழுவி விட்டு பொடி பொடியாக நறுக்கி இந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். அரிசியையும் இந்த தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டால் கூட சூப்பராக வெந்து நமக்கு கிடைக்கும்.

இந்த விழுதை நன்றாக ஆற வைத்து அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் பேக் போல நமக்கு கிடைத்துவிடும். அதை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். அரைந்த இந்த விழுதோடு பால் பவுடரையும் கான்பிளவர் மாவையும் சேர்த்து கலக்க வேண்டும். ஓரளவுக்கு திக்காக ஒரு பேஸ்ட் நமக்கு கிடைத்திருக்கும். உங்களுக்கு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் தேவைப்பட்டால் கூட ஊற்றிக் கொள்ளலாம். அது உங்கள் சௌகரியம். இந்த பேக்கில் இறுதியாக எலுமிச்சை பழச்சாறை சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் நன்றாக இருக்கும்.

- Advertisement -

ஒரு நாளைக்கு, ஒருமுறை இந்த பேக்கை முகத்தில் போட வேண்டும். நேரம் கிடைக்கும்போது போட்டுக் கொள்ளுங்கள். முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த பேக்கை முகம் முழுவதும் தடவி விட்டு, கழுத்துப் பகுதிகளிலும் போட்டு, 20 நிமிடங்கள் காய வையுங்கள். சருமம் அப்படியே இழுத்து பிடிக்கும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். ஏழு நாட்கள் தொடர்ந்து இந்த பேக்கை போட்டு பார்த்தால் ரிசல்ட் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

இந்த பேக்கை தயார் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான். மருந்து தெளித்த, ஸ்பிரே அடித்த வாழைப்பழத் தோலை பயன்படுத்தவே கூடாது. அது ஸ்கின்னுக்கு அலர்ஜியை கொடுத்துவடும். மருந்து தெளிக்காமல் பழுக்கக் கூடிய வாழைப்பழ தோலை பயன்படுத்துவது மிக மிக நல்லது.

இதையும் படிக்கலாமே: காடு போல அடர்ந்த நீண்ட கருகரு கூந்தலை பெற சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருள் மட்டும் போதும். அமேசான் காட்டில் கிடைக்கும் அரிய வகை எண்ணெயை தேய்த்தால் கூட இவ்வளவு முடி வளராது.

மஞ்சள் வாழை, கற்பூர வாழை, செவ்வாழை என்று எந்த பழத்தின் தோலை வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. அதேபோல பால் பவுடருக்கு பதிலாக காய்ச்சிய காய்ச்சாத பால் பயன்படுத்தலாம். ஆனால் கிரீமை பிரிட்ஜில் வைத்தாலும் அது சில சமயம் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. இரண்டு நாட்கள் மட்டுமே கிரீமை வைத்து பயன்படுத்தும் படி இருக்கும்.

- Advertisement -