காடு போல அடர்ந்த நீண்ட கருகரு கூந்தலை பெற சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருள் மட்டும் போதும். அமேசான் காட்டில் கிடைக்கும் அரிய வகை எண்ணெயை தேய்த்தால் கூட இவ்வளவு முடி வளராது.

hair1
- Advertisement -

இப்போதெல்லாம் பெண்கள் பெரிய முடியை வளர்க்க விரும்புவதில்லை என்றே சொல்லலாம். இதற்கு காரணம் அதிகமாக முடி வளர்க்க வேண்டும் என்றால் அதை அதிக அளவில் பராமரிப்பு வேண்டும் என்று நினைப்பது தான். இந்த ஒரு எண்ணையை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். அழகிய கருகரு கூந்தலை எந்த ஒரு செலவும், பராமரிப்பும் இல்லாமல் சுலபமாக வளர்த்து விடலாம். வாங்க அதை எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது என்பதையெல்லாம் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி வளர கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறை:
இந்த எண்ணெய் தயாரிக்க சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை விட, செக்கில் ஆட்டி எண்ணெய் பயன்படுத்தும் போது முடி நன்றாக வளர்வதற்கான பாதி வேலையை இந்த எண்ணெயை செய்து விடும்.

- Advertisement -

இந்த எண்ணெய் தயாரிக்க 100 கிராம் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். வெறும் வெந்தயம் மட்டும் போட்டு அரைக்கும் போது அதிக பவுடராக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக தான் அரைப்படும். இத்துடன் 2 கைப்பிடி கருவேப்பிலை உருவி சுத்தம் செய்து அதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை அரைக்கும் போது தண்ணீர் ஊற்றக் கூடாது.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து இரும்பு கடாய் வைத்துக் கொள்ளுங்கள். முடி வளர எந்த எண்ணையை காய்ச்சுவதாக இருந்தாலும் இரும்பு கடாயில் காய்ச்சும் போது, அதில் இருக்கும் சத்து முடி இன்னும் அதிகமாக வளர உதவி செய்யும். உங்களிடம் இரும்பு கடை இல்லை என்றால் சில்வர் எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

இரும்பு கடாய் அடுப்பில் வைத்து சூடானவுடன் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு படுத்துங்கள். எண்ணெய் சூடானவுடன் அரைத்து வைத்த கறிவேப்பிலை, வெந்தய பொடி சேர்த்தவுடன் அடுப்பை மீடியம் பிலிம் வைத்து விடுங்கள். தீ அதிகமாக இருந்தால் கறிவேப்பிலை போட்டவுடன் கருகி விடும்.

இந்த எண்ணையை மீடியம் ஃப்ளேமில் பத்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். அப்போது கருவேப்பிலையில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் குறைந்து சலசலப்பு அடங்கி எண்ணெய் தெளிவாக ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய்யை இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் காய்ச்சிய எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் தலைக்கு தேய்த்து மசாஜ் வந்தால் போதும். முடி வளர நீங்கள் வேறு எந்த ஒரு பராமரிப்பையும் செய்ய வேண்டியது இல்லை. இந்த எண்ணெய் தேய்த்த பிறகு முடியை அலச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேளை இந்த எண்ணைத் தொடர்ந்து தலையில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இரவு உறங்கும் முன்பு இதை உங்கள் முகத்தில் தேய்த்தால் போதும். காலையில் உங்கள் முகம் சூரியனை போல பிரகாசமாக மின்னும். இயற்கையிலே கருமை நிறம் கொண்டவர்களுக்கு கூட வெள்ளையாக மாற்றி விடும்.

இந்த எண்ணெயில் இருந்து வடித்து வைத்திருக்கும் கருவேப்பிலை வெந்தய சக்கையும் கூட கீழே போட்டு விடாமல், அத்துடன் கொஞ்சம் தயிர் கலந்து அதையும் தலையில் பேக் போல போட்டு குளித்து விடுங்கள்.இந்த கறிவேப்பிலை எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு கூட சுலபத்தில் தீர்வு கிடைத்து விடும்.

- Advertisement -