உங்க வீட்ல பாத்ரூம் கதவு இப்படிதான் அசுத்தமாக இருக்குமா? உப்பு பூத்த வெள்ளை படிந்த கறைகளை சுலபமாக 5 நிமிடத்தில் எப்படி நீக்குவது?

நம்மில் நிறைய பேர் வீடுகளில் பாத்ரூமுக்கு ஃபிளைவுடில் தான் கதவுகளை போடுகின்றோம். குறிப்பாக இந்த கதவின் உள்பக்கம், கீழ்ப்பக்கம் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் அசுத்தமாக தான் இருக்கும். அதாவது அந்த இடத்தை நாம் சுத்தம் செய்வோம். ஆனால் தண்ணீர் ஊற்றி கழுவும்போது சுத்தமாக இருப்பது போல் தெரியும். தண்ணீர் காய்ந்து விட்டால், மீண்டும் வெள்ளை நிறத்தில் பூத்து, பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. இந்தக் கறையை சுலபமாக எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

door

நாம் குளிக்கின்ற சோப்பு தண்ணீரும் உப்பு தண்ணீரும், அந்தக் கதவில் தெளிப்பதன் மூலமாகத்தான் இந்த கறை உண்டாகிறது. நாம் குளித்த உடனேயே ஒருமுறை வைப்பரை வைத்தோ அல்லது ஒரு துணியை வைத்தோ கதவை துடைத்து விட்டோம் என்றால், இந்த கறை படியாமல் உங்களது கதவு எப்போதுமே சுத்தமாக இருக்கும்.

குளிப்பதற்கே நேரமில்லை. இதில் குளித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது நன்றாகவே புரிகிறது! சரி, 15 நாட்களுக்கு ஒரு முறையோ, 1 மாதத்திற்கு ஒரு முறையோ இப்படி பாத்ரூம் கதவுகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் துணி துவைக்கும் லிக்விட் – 1 ஸ்பூன், சோடா உப்பு – 1 ஸ்பூன், பல் துலக்கும் பேஸ்ட் – 1 ஸ்பூன், வினிகர் – 2 ஸ்பூன், 1 எலுமிச்சை பழச் சாறு இவைகளை சேர்த்து நன்றாக பேஸ்ட்போல் தயார் செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

liquid

உங்களுடைய வீட்டில் துணி துவைப்பதற்கு பவுடர் பயன்படுத்தினாலும் அந்த பவுடரை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் லிக்விட் போட்டு தேய்த்தால் அழுக்கு சுலபமாக போய்விடுகிறது. இந்தக் கலவையை பாத்ரூம் கதவுகளில் வெள்ளைத் திட்டுகள் இருக்கும் இடத்தில் மேலே தடவி விட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு சின்ன நாரை வைத்து தேய்த்து எடுத்தாலே போதும். இதில் இருக்கும் அழுக்கு வெள்ளைத் திட்டுக்கள் படிந்த உப்புக்கறை எல்லாமே நீங்கிவிடும். உங்கள் வீட்டில் நிறைய அழுக்கு இருந்தால் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து ஸ்டில் நாரை வைத்து தேய்க்க வேண்டும். அதன் பின்பு சாதாரண தண்ணீரை போட்டு கழுவி பாருங்கள். வெள்ளை நிறத்தில் படிந்த அழுக்கு கறைந்து செல்வதை, உங்கள் கண்களாலேயே காண முடியும்.

bathroom

இதே கலவையை பயன்படுத்தி உங்கள் வீட்டில் பாத்ரூம் தரையில் படிந்திருக்கும் அழுக்கு, டைல்ஸில் படிந்திருக்கும் அழுக்கு எல்லாவற்றையும் சுலபமாக சுத்தம் செய்ய முடியும். உப்பு கறைகளை அடர்த்தியாக படிய விட்டு விட்டோமேயானால், அதை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாதத்திற்கு ஒருமுறையோ இப்படி சுத்தம் செய்யும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

இதையும் படிக்கலாமே
இவ்வளவு சூப்பரான டிப்ஸை எல்லாம் இத்தனை நாளா தெரிஞ்சுக்காமலே விட்டுட்டோமே! பயனுள்ள, தினசரி பயன்பாட்டிற்காக 5 சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.