செலவும் ஆகக்கூடாது! ஆனால் 24 மணி நேரமும் பாத்ரூம் வாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் இந்த டிப்ஸ்.

bathroom

செலவும் ஆகக்கூடாது, ஆனால் பலனும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்று நம்மில் பல பேர் யோசிப்பது இயல்பு தான். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. பாத்ரூமை எப்போதும் வாசமாக வைத்துக்கொள்ள அதிகப்படியான செலவில்லாத ஒரு சூப்பர் டிப்ஸ் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பாத்ரூம் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமென்றால், தினமும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பாத் ரூமை கழுவி விட்டு விடவேண்டும்.

bathroom-freshner

தினமும் கழுவ முடியவில்லை என்று சொல்பவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது பாத்ரூமை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சரி என்ன தான் சுத்தம் செய்தாலும் பாத்ரூமிலிருந்து வீசக்கூடிய ஒரு கெட்ட வாடை கட்டாயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

பெரும்பாலும் இப்போது எல்லோர் வீட்டிலும் துணிகள் வாசமாக இருக்க கம்ஃபோர்ட் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. உங்களுடைய வீட்டில் இதற்காக நீங்கள் எந்த ஃபேபிரிக் கண்டிஷனர் யூஸ் பண்ணாலும் சரி, இல்லை எங்களுடைய வீட்டில் நாங்கள் இப்படி வாசம் மிகுந்த கம்ஃபோர்ட் எல்லாம் வாங்கமாட்டோம் என்றாலும் சரி, சிறிய அளவில் பத்து ரூபாய் பாக்கெட்டுகள் கூட இப்போது கம்ஃபோர்ட் கிடைக்கின்றது.

comfort

இதற்காகவே ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பழைய ஸ்ப்ரே பாட்டில்கள் ஏதாவது இருந்தால் அதில் 250ml அளவு தண்ணீரை ஊற்றி, இந்த சிறிய பத்துரூபாய் கம்போர்டையும் அந்த தண்ணீரில் சேர்த்து, நன்றாக குலுக்கி கலந்து கொள்ள வேண்டும். (கொஞ்சம் கிருமி நாசினியாக இந்த ஸ்பிரே இருக்க வேண்டும் என்றால் இரண்டு மூடி டெட்டால், இதோடு சேர்த்து கொள்ளலாம்.) அவ்வளவு தான் இதை உங்களுடைய பாத்ரூமிலேயே வைத்துவிடுங்கள். தினமும் காலையில் இந்த ஸ்ப்ரேவை உங்கள் பாத்ரூம் மூலைமுடுக்குகளில், அடித்தாலே போதும். நாள்முழுவதும் உங்களது பாத்ரூம் பிரஷ்ஷாக வாசமாக இருக்கும்.

கட்டாயமாக இருபதிலிருந்து இருபத்தைந்து நாட்களுக்கு இந்த லிக்விட் ஜெல் தீர்ந்து போகாது. கடையில் நிறைய காசு கொடுத்து ஓடோனில் போன்ற வாசம் மிகுந்த பொருட்களை வாங்கி வைப்பதைவிட, பட்ஜெட் இதில் உங்களுக்கு குறைவுதான். பத்துரூபாய் செலவு தானே.

spray

சமையலறையில் அசைவ சாப்பாடு செய்து முடித்த பின்பு அசைவ பொருட்கள் சுத்தம் செய்த பின்பு சிங்க்கிற்க்கு கீழேயும், உள்ளேயும் நீங்கள் இந்த லிங்க்விடை பயன்படுத்திக் கொள்ளலாம். அசைவ பொருட்களிலிருந்து வீசும் அந்த கெட்டவாடை சீக்கிரமே நீங்கிவிடும். இதேபோல் உங்கள் வீட்டு ஸ்கிரீன், உங்கள் வீட்டு மிதியடிகளுக்கு மேல் பக்கத்திலும், இதை ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இப்படி பல வகைகளில் இந்த ஸ்ப்ரே பாட்டில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கும் இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி பாருங்கள்.