உங்க பாத்ரூமிலிருந்து யூரின் ஸ்மெல் ஒரு துளி கூட வரவே வராது. 24 மணி நேரமும் பாத்ரூம் சுத்தமாக இருக்க ஒரே 1 ஜக் இந்த தண்ணீரை மட்டும் ஊற்றுங்கள் போதும்.

toilet
- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தான் பாத்ரூமில் லிக்விட் ஊற்றி சுத்தம் செய்ய முடியும். சுத்தம் செய்த பிறகு பாத்ரூம் எவ்வளவு பிரெஷ் ஆக நறுமணத்தோடு இருக்கும். அதேபோல 24 மணி நேரமும் உங்களுடைய பாத்ரூம் சுத்தமாக வாசத்துடன் இருக்க தேவையான சின்ன சின்ன குறிப்புகள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதோடு மட்டும் அல்லாமல் சமையலறை சிங் வாஷ்பேஷன் இவைகளில் இருந்து கரப்பான் பூச்சி கொசு சின்ன சின்ன கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் வெளியே வராமல் இருக்க என்ன செய்வது என்பதை பற்றிய குறிப்பும் இதில் சொல்லப்பட்டுள்ளது. சுத்தத்தின் மீதும் உங்கள் வீட்டின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள் இந்த குறிப்புகளை முழுமையாக படித்து பயன்பெறலாம்.

குறிப்பு 1:
பாத்ரூம் எப்போதுமே வாசமாக இருக்க வேண்டும். ஒரு முறை வீட்டில் இருப்பவர் சிறுநீர் கழித்து விட்டு வந்தாலும், அந்த சிறுநீர் வாசமானது பாத்ரூமில் நிலையாக தங்காமல் இருக்க என்ன செய்வது. 1/2 பக்கெட் தண்ணீரில், 1 மூடி அளவு டெட்டாயில் ஊற்றி கலந்து தண்ணீரை வைத்து விடுங்கள். ஒருமுறை பாத்ரூமில் சிறுநீர் கழித்தவுடன் நல்ல தண்ணீரை சுத்தமாக முதலில் ஊற்றிவிட்டு, அதன் பின்பு இறுதியாக ஒரு ஜக் டெட்டாயில் கலந்த தண்ணீரை ஊற்றிவிட்டு வரவேண்டும். யூரின் ஸ்மெல் ஒரு துளி கூட வீசாதுன்னா பார்த்துக்கோங்க. குறிப்பாக உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இந்த பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் யூரின் போன பின்பு அந்த இடத்தில் கெட்டவாடை அதிகமாக வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பு 2:
உங்க வீட்ல வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தா, இந்த குறிப்பு உங்களுக்காக. வெஸ்டர்ன் டாய்லெட்டில் தண்ணீரை ஃபிளஷ் செய்ய ஒரு டேங்க் இருக்கும் அல்லவா. அந்த டேங்கை சுலபமாக நம்மால் திறக்க முடியும். அந்த டேங்க்குக்குள் எப்போதுமே ஒரு ஸ்பூன் பேஸ்ட்டை போட்டு வையுங்கள். ஒருமுறை தண்ணீர் ஃபிளஷ் ஆகும் போது ஸபேஸ்ட் முழுமையாக கரைந்து போகாது. அதாவது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இந்த பேஸ்டின் வாசம் அப்படியே அந்த டேங்கில் இருக்கும்.

பேஸ்ட் சுத்தமாக கரைந்த உடன் மீண்டும் பேஸ்டை அந்த டேங்கில் போட்டு வைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறை ஃபிளஸ் செய்யும்போதும் அந்த பேஸ்ட் கலந்த தண்ணீர் வெளியாகும் போது உங்களுடைய பாத்ரூமில் எப்போதும் கரை பிடிக்காமல் ஃபிரஷ் ஆக இருக்கும். இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

குறிப்பு 3:
சிங்கிள் இருந்து கரப்பான் பூச்சி வராமல் இருக்க என்ன செய்வது. கொஞ்சமாக அந்து உருண்டை, பூச்சி உருண்டை, ரசக்கற்பூரம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதை இரண்டு எடுத்து நன்றாக நசுக்கி தண்ணீரில் போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு 1 ஸ்பூன் டெட்டால் ஊற்றி வாடை நிறைந்த இந்த தண்ணீரை ஒரு ஜக் அளவு தண்ணீர் போகும் அந்த சிங் ஓட்டையில் ஊற்றி விட வேண்டும். வாஷ்பேஷன் ஓட்டை இருந்தால் அதிலும் ஊற்றி விடலாம். பாத்ரூம் தண்ணீர் போகக்கூடிய ஓட்டையிலும் இந்த தண்ணீரை இரவு நேரங்களில் ஊற்றி விட்டு விட்டால் கரப்பான் பூச்சி தொந்தரவு இருக்காது.

குறிப்பு 4:
ரொம்பவும் உப்பு கரை படிந்த டயில்ஸை என்னதான் சோப்பு லிக்விட் போட்டு தேய்த்தாலும் அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்யவே முடியாது. ரொம்ப ரொம்ப கடினம். உங்களுடைய குளியலறை ஈரம் இல்லாமல் காய்ந்து இருக்கும் போது இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். எலக்ட்ரிஷன் கடைகளில் உப்பு காகிதம் என்று ஒன்று கிடைக்கும். அந்த உப்பு காகிதத்தை வாங்கி சிறிய துண்டுகளாக கிழித்து தேவையான அளவு கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு காகிதத்தை கொண்டு உப்பு கரைகள், உள்ள இடத்தில் லேசாக தேய்த்துக் கொடுத்தாலே உப்பு கரை சுத்தமாக நீங்கிவிடும். டைல்ஸ் ஈரமாக இருக்கும் போது இந்த குறிப்பை பின்பற்ற முடியாது. பாத்ரூம் சுத்தமாக காய்ந்திருக்கும் போது கொஞ்சம் கொஞ்ச டைல்ஸாக கூட நீங்கள் சுத்தம் செஞ்சுக்கலாம். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய குளியலறை எப்போதும் சுத்தமாக வாசமாக இருக்கும்.

- Advertisement -