20 வருடமாக உப்பு கறை படிந்த பாத்ரூமை கூட, 20 நிமிடத்தில் சுத்தம் செய்ய இதோ ஒரு புது ஐடியா.

bathroom
- Advertisement -

நம்முடைய குளியலறை கழிவறையை ஒரு மாதம் வரை முழுமையாக சுத்தம் (டீப் கிளீனிங்) செய்யாமல் விட்டுவிட்டால் அவ்வளவு தான். உப்பு தண்ணீரில் இருக்கின்ற இடத்தில் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் படிந்து அந்த இடமே பார்ப்பதற்கு ரொம்பவும் அசுத்தமாக தெரியும். இப்படிப்பட்ட குளியலறையை சுத்தம் செய்வதற்கு நமக்கு நிறைய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எல்லா குறிப்பையும் நாமும் அடித்து பிடித்து முயற்சி செய்து பார்த்திருப்போம். அதில் குளியல் அறையில் இருக்கும் அழுக்கு கொஞ்சம் போகியும், கொஞ்சம் போகாமலும் இருக்கும் அல்லவா. அதை சுத்தம் செய்ய இன்னொரு ஐடியாவை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதையும் கொஞ்சம் முயற்சி செய்து தான் பார்ப்போமே.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள். ரெட் ஹேப்பிக் தான். கழிவறையை சுத்தம் செய்ய ப்ளூ ஹேர் பிக் பயன்படுத்துவோம் அல்லவா. குளியலறையை சுத்தம் செய்ய ரெட் ஹேப்பிக் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் இரண்டு பொருட்களை சேர்க்கப் போகின்றோம். ஒரு சிறிய கிண்ணத்தில் ரெட் ஹேர்பிக் 2 மூடி, வினிகர் 2 மூடி, பல் தேய்க்க கூடிய பேஸ்ட் 2 ஸ்பூன் அளவு போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலக்க வேண்டும்.

- Advertisement -

பேஸ்ட் அந்த தண்ணீரில் நன்றாக கரைந்த பின்பு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி இதை உங்கள் குளியலறை டைல்ஸ் முழுவதும் ஸ்பிரே செய்து விட்டு விடுங்கள். தரையில் அழுக்கு இருந்தால் கூட அந்த இடத்தில் இந்த ஸ்பிரேவை அடித்துக் கொள்ளலாம். தரைக்காய்ந்து இருந்தால் இந்த ஸ்ப்ரேவை அடித்த பிறகு உப்பு கரை சீக்கிரமாக நீங்கிவிடும். தரை ஈரமாக இருந்தால் உப்பு கரை அவ்வளவு எளிதில் நீங்காது. (உங்களுடைய வீட்டில் ஸ்பிரே பாட்டில் இல்லை என்றால் பரவாயில்லை. ஒரு பிளாஸ்டிக் வாட்டர் கேனில் இந்த லிக்விடை ஊற்றி வாட்டர் கேனை மூடி போட்டு, மூடியின் மேல் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். ஸ்ப்ரே பாட்டில் தயாராகிவிடும்.) ஸ்பிரே செய்த இடத்தை 10 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

அடுத்தது சாதாரணமாக கொஞ்சம் ஹார்டாக இருக்கும் ஸ்பான்ஜை எடுத்து இந்த லிக்விடில் முக்கி, ஸ்பிரே தெளித்து ஊற வைத்த இடங்களில் எல்லாம், கறை படிந்திருக்கும் இடத்தை எல்லாம் தேய்த்துக் கொடுத்தாலே போதும். டைல்ஸ், உப்பு கறை படிந்திருக்கும் ஸ்டீல் டேப், எல்லாம் சுத்தமாகிவிடும். அழுத்தி தேய்க்க வேண்டாம். லேசாக தேய்த்தாலே கறை முழுவதுமாக நீங்கிவிடும். இதே லிக்விட் வைத்து குளியல் அறையில் இருக்கும் பக்கெட் ஜக்கையும் தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பெரும்பாலும் இப்போது நம்முடைய வீட்டு பாத்ரூம் சுவர் முழுவதும் டயல்ஸ்தான் சுற்றிலும் ஒட்டி இருக்கிறது. அந்த டைல்ஸ் முழுவதும் சுத்தம் செய்ய இந்த லிக்விட் பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும். சூப்பரா கிளீன் ஆயிடும். உங்களுடைய ஸ்டீல் டேப் அப்படியே புதுசு போல பள பளன்னு மாறும். ட்ரை பண்ணுங்க.

இதையும் படிக்கலாமே: அட பிரிட்ஜில் வைக்காமலே இந்தக் கீரையை இத்தனை நாள் வதங்காம வைக்க முடியுமா? இத படிச்சிட்டு உடனே இந்த டிப்ஸ் டிரை பண்ண ஆரம்பிச்சுடுங்க.

மாதத்தில் ஒரு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே உங்களுடைய பாத்ரூம் எப்போதும் புதுசு போல ஜொலித்துக் கொண்டே இருக்கும். ரொம்பவும் அடர்த்தியாக உப்பு கறை படிந்து இருந்தால் மாதம் தோறும் இந்த குறிப்பை பின்பற்றி வர படிப்படியாக உப்புக்கறை நீங்கிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -