வாரம் 1 முறை குளிக்க போறதுக்கு முன்னாடி இப்படி செஞ்சா, பாத்ரூம் டைல்ஸ் மற்றும் கதவுகளில் படிந்திருக்கும் உப்பு கரைகளை 5 நிமிடத்தில் கொஞ்சம் கூட இல்லாமல் காணாமல் செய்து விடலாம்!

bathroom-cleaning-tips
- Advertisement -

முந்தைய காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருக்கும். சில அடிகள் தோண்டியவுடன் நல்ல தண்ணீர் நமக்கு கிடைத்துவிடும். அது மட்டுமல்லாமல் பாத்ரூம் ரொம்பவே பெரிய பெரிய அளவில் கட்டி வைத்திருப்பார்கள். டைல்ஸ், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். இதனால் உப்பு கரை எனும் வார்த்தைக்கு இடம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றோ நிலத்தடி நீர்மட்டம் குறைவதன் காரணமாக தண்ணீர் உப்பாக மாறி வருகிறது.

இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொழுது குறுகிய அளவில் இருக்கும் பாத்ரூம்களில் குளிக்கும் பொழுது தெறிக்கும் தண்ணீரால் டைல்ஸ் மற்றும் கதவுகளில் உப்பு கரை படிந்து நாளடைவில் அதன் மீது அழுக்குகள் சேர்ந்து ரொம்ப அறுவெறுப்பாக காட்சி தரும். இது போன்ற விடாப்பிடியான கறைகளை அகற்றுவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டி இருக்கும். எனவே அட்லீஸ்ட் வாரம் ஒரு முறை குளிக்க போறதுக்கு முன்னாடி இப்படி ஒரு முறை செய்துவிட்டு பின்னர் குளித்துவிட்டு வந்தால் ஒரு கரை கூட இல்லாமல் உங்கள் பாத்ரூம் புத்தம் புதியதாக மின்னும். அப்படி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

நீங்கள் குளிக்கப் போகும் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி அல்லது அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு சிறிய மக்கில் 2 ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். இவற்றுடன் 1 ஸ்பூன் துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விட் அல்லது சர்ஃப் பவுடரை கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள். நன்கு கலந்து விட்டு ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா போட்டு கொள்ளுங்கள். பேக்கிங் சோடா போட்டதும் நுரை பொங்க ஆரம்பிக்கும். இதனை கலக்கும் பொழுது கிரீம் போன்ற ஒரு கலவை நமக்கு கிடைக்கும்.

இந்த கலவையை கையில் கையுறை அணிந்து கொண்டு சாதாரண ஸ்கிரப்பர் கொண்டு எங்கெல்லாம் உப்பு கரை படிந்து இருக்கிறதோ அங்கெல்லாம் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு நீங்கள் குளிக்கப் போகும் பொழுது ஸ்க்ரப்பர் கொண்டு லேசாக கையுறை அணிந்து கொண்டு தேய்த்து விட்டால் போதும், கொஞ்சம் கூட உட்புக்கறை மற்றும் அழுக்குகள் இல்லாமல் சுத்தமாகிவிடும்.

- Advertisement -

அதன் பிறகு எப்பொழுதும் போல நீங்கள் குளித்து விட்டு வரலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் இதற்கென தனியாக ஒரு நாள் அமர்ந்து மொத்தமாக அதிக நேரம் செலவழித்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக காசு கொடுத்து எந்த பொருளையும் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் நெடி எடுக்காது என்பதால் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது எனவே சிரமம் பார்க்காமல் வாரம் ஒருமுறை இப்படி ஐந்து நிமிடம் பாத்ரூமிற்காக கொஞ்சம் செலவிட்டால், எப்போதும் பிரஷ்ஷான மற்றும் புத்தம் புதிய பாத்ரூம் அனைவரின் முன்னிலையிலும் உங்களை மரியாதை படுத்தும். நீங்கள் உங்கள் சமையலறை மற்றும் பாத்ரூம் எப்படி வைத்திருக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து தான் உங்களுடைய சுத்தம் பற்றிய மதிப்பு மற்றவர்களுக்கு ஏற்படும்.

- Advertisement -