ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், உங்கள் வீட்டு பாத்ரூமை 24 மணி நேரமும் வாசமாக வைத்துக் கொள்ள இந்த 1 பொருள் இருந்தால் போதும்.

bathroom
- Advertisement -

அன்றாடம் பயன்படுத்தும் குளியலறை கழிவறை எல்லாமே இப்போது வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறது. சில பேர் வீடுகளில் அட்டாச் பாத்ரூம் வேற. அப்படி இருக்கும்போது பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, பாத்ரூம் 24 மணி நேரமும் வாசமாக இருக்க வேண்டும் என்று மாதம் தோறும் கடையிலிருந்து நிறைய பொருட்களை வாங்கி பாத்ரூமில் மாட்டி வைப்போம். அதற்கு உண்டான செலவும் அதிகம். அந்த பொருள் நீண்ட நாட்களுக்கு கூட வாசனையை கொடுக்காது. 25 லிருந்து 30 நாட்களுக்குள் அந்த வாசனை போய்விடும். உங்களுடைய வீட்டு பாத்ரூமை செலவே இல்லாமல் வாசமாக வைத்துக் கொள்ள இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு சிறிய டப்பாவை எடுத்துக்கோங்க. அதில் ஆப்ப சோடா 2 ஸ்பூன், உங்கள் முகத்திற்கு போடும் பவுடர் 2 ஸ்பூன், கம்ஃபோர்ட் 1 டேபிள் ஸ்பூன், உங்கள் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு கம் ஊற்றி டப்பாவில் இருக்கும் பொருளை நன்றாக கலந்து கொடுக்க வேண்டும். தேவையான அளவு கம் ஊற்றி உங்கள் கையை கொண்டு பிசியுங்கள். சப்பாத்தி மாவு போல் நமக்கு ஒரு உருண்டை கிடைக்கும். அதை லேசாக கட்லெட் போல ஒரு அழுத்தம் கொடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்து வெயிலில் ஒரு நாள் காய வைத்து விடுங்கள். சோப்பு கட்டி மாறி நமக்கு ஒரு கட்டி கிடைத்திருக்கும். இதிலிருந்து நல்ல நறுமணம் வெளிவரும். இதே போல இரண்டு மூன்று கூட தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மெலிசாக இருக்கக்கூடிய டிஷ்யூ பேப்பர் அப்படி இல்லை என்றால் இப்போது ரொம்பவும் மெலிசாக கேரிபேக் போல துணி பைகள் கிடைக்கிறது அல்லவா. அதை சதுர வடிவில் வெட்டி, அதில் நீங்கள் தயார் செய்த சோப்புக்கட்டியை வைத்து ஒரு நூல் போட்டு கட்டி ஏதாவது ஒரு ஆணியல் பாத்ரூமில் தொங்க விட்டு விடுங்கள். இதிலிருந்து லேசான நல்ல நறுமணம் பாத்ரூம் முழுவதும் எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும். இது அவ்வளவு சீக்கிரத்தில் வாசனையை இழக்காது. கரைந்தும் போகாது. இதேபோல இரண்டு மூன்று தயாரித்து வாஷ்பேசனுக்கு பக்கத்தில் கழிவறையில், குளியலறையில் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த இடம் எல்லாம் வாசமாக வேண்டுமோ அந்த இடத்தில் எல்லாம் இதை வைத்துக் கொள்ளலாம். நீங்க வேணா இந்த மெத்தட ட்ரை பண்ணி பாருங்க. புடிச்சிருந்தா மட்டும் தொடர்ந்து இதையே யூஸ் பண்ணிக்கலாம். மாதம் தோறும் கொஞ்சம் காசை மிச்சமும் செய்யலாம்.

பாத்ரூமில் துர்நாற்றம் வீசாமல் பாதுகாத்துக் கொள்ள இன்னொரு வழியும் உள்ளது. ஒரு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதாவது பாதி அளவு தண்ணீர் நிரப்பினால் கூட போதும். அந்த தண்ணீரில் ஒரு மூடி டெட்டால், 1 மூடி ஷாம்பு ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் டாய்லட்டை பயன்படுத்தி தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்த பிறகு இறுதியாக நாம் கலந்து வைத்திருக்கும் இந்த டெட்டால் தண்ணீரை ஒரு ஜாக் எடுத்து டாய்லெட் உள்ளே ஊற்றி விட்டு வர வேண்டும். இப்படி செய்தால் உங்கள் பாத்ரூம் துர்நாற்றமே வீசாது.

- Advertisement -

அழுக்குப்படிந்த பாத்ரூமில் இருந்து தான் அடிக்கடி துர்நாற்றம் வீசும். கூடுமானவரை பாத்ரூமை வாரத்தில் இரண்டு நாட்களாவது ஏதாவது ஒரு லிக்விட் போட்டு கழுவ வேண்டும். பிரஷ் வைத்து தேய்த்து கழுவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக பணம் மிச்சமாகும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படாது. உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் உங்களுடைய கழிவறையை முகம் சுழிக்காமல் பயன்படுத்துவார்கள்.

- Advertisement -