ரொம்ப ரொம்ப ஈஸியா வெஜிடபிள் ஆம்லெட் செய்வது எப்படி?

omelette
- Advertisement -

பேச்சுலர் ஆம்லெட் | Omelette recipe in Tamil

இன்னைக்கு நாம சுவையான ஒரு பேச்சுலர் ஆம்லெட் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகள், சேர்த்த ஆம்லெட் மிக மிக எளிமையாக செய்வது எப்படி. இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக் ஃபாஸ்ட்டை சூப்பராக முடிக்கலாம். வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில் கூட ஆண்களுக்கு இந்த ரெசிபி கை கொடுக்கும்.

செய்முறை

முதலில் அடுப்பில் அகலமான ஒரு பேன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தோசை கல்லிலேயே கூட இதை செய்யலாம். 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் – 1/2 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, போட்டு இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் வதங்கிய பின்பு மெலிசாக நறுக்கிய கேரட் – 1/2 கைப்பிடி, மெல்லிசாக நறுக்கிய குடைமிளகாய் – 1/2 கைப்பிடி, மெலிசாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 1/2 கைப்பிடி, முட்டைகோஸ் – 1/2 கைப்பிடி இந்த காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு தூளை தூவி, எண்ணெயிலேயே நன்றாக வதக்கி விட வேண்டும்.

தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. காய்கறிகளை நைசாக வெட்டியிருந்தால் எண்ணெயிலேயே வதங்கி வெந்து நமக்கு கிடைக்கும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு மூடி போட்டு வேக வையுங்கள். இந்த காய்கறிகளை எல்லாம் கடித்து சாப்பிடும் போது க்ரஞ்சியாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு வெந்தால் போதும்.

- Advertisement -

இந்த காய்கறிகள் வெந்து வருவதற்குள் தனியாக ஒரு கிண்ணத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகுத்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், சில்லி ஃப்ளக்ஸ் – 1 ஸ்பூன், முட்டைக்கு தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக அடித்து கலக்க வேண்டும். சில்லி ஃப்ளக்ஸ் இல்லை என்றால் மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பரோட்டா, பூரி, சப்பாத்தி, ரைஸ் போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிட சப்பு கொட்டும் சுவையில் 10 நிமிடத்தில் கறி சுவையை மிஞ்சும் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

எவ்வளவுக்கு எவ்வளவு முட்டையை பீட் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆம்லெட் உப்பலாக கிடைக்கும். தோசை கல்லில் வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளை வட்டமாக பரவலாக பரப்பிவிட்டு, அடித்து வைத்திருக்கும் முட்டையை அதன் மீது ஊற்றி, முட்டைக்கு மேலே சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப் போட்டு வேக வைத்தால் சூப்பரான சுவை தரும், ஆரோக்கியம் தரும், ஆம்லெட் தயார். சுட சுட இந்த ஆம்பலெட் சாப்பிட்டு பாருங்க வேற லெவல் டேஸ்ட் இருக்கும். இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -