சப்பு கொட்டும் சுவையில் 10 நிமிடத்தில் கறி சுவையை மிஞ்சும் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

- Advertisement -

சப்பாத்தி, பூரி, பரோட்டா, சாதம் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அருமையான சுவையில் கத்திரிக்காய் கிரேவி இது போல செஞ்சு சாப்பிட்டு பாருங்க, அசைவ கிரேவிகள் கூட தோத்து போயிடும். அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் இந்த கத்திரிக்காய் கிரேவி 10 நிமிடத்தில் சூப்பராக நாவூரும் சுவையில் எப்படி செய்யலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கத்திரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க: மல்லி விதைகள் – ரெண்டு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், பட்டை – இரண்டு துண்டு, முந்திரி பருப்பு – ஐந்து, தேங்காய் துண்டுகள் – கால் கப். சமைக்க: சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கத்திரிக்காய் – கால் கிலோ, உருளைக்கிழங்கு – ஒன்று, பெரிய வெங்காயம் – ரெண்டு, தக்காளி – 4, இடித்த இஞ்சி பூண்டு – ஒரு ஸ்பூன், மஞ்சத்தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தண்ணீர் – கால் கப்.

- Advertisement -

கத்திரிக்காய் கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். எண்ணெய் எதுவும் சேர்க்காமல் தனியா விதைகள், மிளகு, சீரகம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இதனுடன் முந்திரி பருப்புகள், கால் கப் அளவிற்கு துண்டுகளாக நறுக்கிய தேங்காய்கள் சேர்த்து ரெண்டு நிமிடம் நன்கு வதக்குங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து இதனை ஆறவிட்டு விடுங்கள்.

பிறகு அடுப்பில் மற்றொரு வாணலி ஒன்றை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு பெரிய உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் கிலோ அளவிற்கு கத்திரிக்காயை காம்பு நீக்கிவிட்டு முழுமையாக வெட்டாமல் நான்காக கீரி சேர்த்து வதக்குங்கள். எண்ணெயெல்லாம் உறிந்து நன்கு வதங்கியவுடன் இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதிலேயே ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயத்தின் நிறம் மாறி வரும் பொழுது, பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து, இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டையும் சேர்த்து மசிய வதக்கி விடுங்கள். இவை மசிந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். மசாலா வாசம் போக நன்கு கலந்து விட்டதும், நீங்கள் எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
செட்டிநாடு பச்சை மிளகாய் புளித்தொக்கு சாப்பிட்டதுண்டா? ஊறுகாய் தேவையில்லை நாவூரும் சுவையில் பாரம்பரிய பச்சை மிளகாய் ரெசிபி ஈஸியா செய்யலாமே!

பின்னர் நீங்கள் அரைக்க வேண்டியவற்றை மிக்ஸியில் சேர்த்து கால் கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீர் கொஞ்சம் சேர்க்கலாம் அவ்வளவுதான், இதற்கு மேல் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு பத்து நிமிடம் சிம்மிலேயே வேகவிடுங்கள். எண்ணெய் எல்லாம் பிரிந்து மேலே மிதக்க கெட்டியான கிரேவி அருமையான சுவையில் பார்ப்பதற்கே சாப்பிட தூண்டும் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் கிரேவி நிச்சயம் கறி சுவையை மிஞ்சும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -