பீச் ஸ்டைல் மாங்கா மசாலா ரெசிபி இனி வீட்டிலேயும் சுலபமாக செய்யலாமே! இந்த மாங்காய் சீசனில் அசத்தலான மாங்காய் மசாலா எப்படி செய்வது?

mango-masala_tamil
- Advertisement -

கோடைகாலம் துவங்கி விட்டாலே முதலில் நம் நினைவிற்கு வருவது மாங்காய் தான். மாங்காய் வந்த பிறகு மாம்பழம் வர துவங்கும். அடுத்தடுத்து மாங்காய் மீது பிரியம் கொள்ளத் தூண்டும் இந்த கோடை காலத்தில், அருமையான பீச் ஸ்டைல் மாங்கா மசாலா ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

பீச்சுக்கு போனாலே முதலில் கண்ணில் படுவது மாங்காய் மசாலா தான். அருமையாக நீள நீளமாக வெட்டி அதில் மாங்காய்க்கு தேவையான மசாலாவை தூவி பேப்பரில் மடித்து கொடுப்பார்கள். சாப்பிடும் பொழுதே நாவில் எச்சில் ஊற துவங்கக் கூடிய இந்த மாங்காய் மசாலா ரெசிபி, இனி பீச்சுக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை! நம்ம வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கடுகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 3, வெல்லம் – ஒரு துண்டு, மாங்காய் – 2.

செய்முறை

அருமையான மாங்காய் மசாலா பீச் ஸ்டைலில் செய்வதற்கு முதலில் இரண்டு இனிப்பும், புளிப்புமாக இருக்கக் கூடிய கிளி மூக்கு மாங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பீச்சில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைப்பதை போல மேல் தோலை நன்கு சுத்தம் செய்துவிட்டு பின் நறுக்கி வையுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு மெல்லிய நீளமான மாங்காய் துண்டுகளுக்கு இடையே சிறு வெட்டுக்களை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவிற்கு விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு ஒரு ஸ்பூன் போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து, மூன்று வர மிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்து செய்யுங்கள். இவை லேசாக வறுபட்டதும் இதிலேயே கொஞ்சம் பெருங்காயத்தூள், தேவையான அளவிற்கு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு பெரிய துண்டு அளவிற்கு வெல்லத்தை சேர்த்து அரையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
டீன்னா இப்படி தான் இருக்கணும் அப்படின்னு சொல்லற மாதிரி ஒரு சூப்பரான டீயை இப்படி போட்டு குடிச்சி பாருங்க. இதுவரைக்கும் டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவங்க கூட இந்த டீக்கு அடிமையாயிடுவாங்க.

பின்னர் வெட்டி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை தட்டில் வரிசையாக அடுக்கி இந்த மசாலாவை தூவி விடுங்கள். அவ்வளவுதாங்க, ரொம்பவே ருசியாக பீச் ஸ்டைலில் இருக்கக் கூடிய இந்த மாங்காய் மசாலா எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது, இந்த சீசனில் நீங்கள் இதை செய்து கொடுத்தால் எல்லோருமே ரசித்து சாப்பிட கூடும். பீச் ஸ்டைல் மாங்காய் மசாலா சாப்பிட இனி பீச்சுக்கு தான் போக வேண்டும் என்கிற அவசியம் இல்லை, நம்ம வீட்டிலேயே இப்படி சுலபமாக செய்து அசத்தலமே!

- Advertisement -