டீன்னா இப்படி தான் இருக்கணும் அப்படின்னு சொல்லற மாதிரி ஒரு சூப்பரான டீயை இப்படி போட்டு குடிச்சி பாருங்க. இதுவரைக்கும் டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவங்க கூட இந்த டீக்கு அடிமையாயிடுவாங்க.

- Advertisement -

காலையில் எழுந்தவுடன் டீ காபி என்று ஏதாவது குடிப்பது என்பது அன்றைய காலம் தொட்டே நம்முள் இருந்து வரும் பழக்கம் தான். ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் டீ குடித்த பிறகு தான் அடுத்த வேலையே செய்வார்கள். அந்த அளவிற்கு இந்த டீக்கும் காபிக்கும் பலர் அடிமை. ஆகையால் தான் வீதிக்கு வீதி பல டீக்கடைகள் பெருகி உள்ளது. அந்த அளவிற்கு நம்முடைய அன்றாட வாழ்வில் இந்த டீ முக்கிய பங்கு வகிக்க கூடியது.

டீ போடுவதிலே பல வகைகள் உண்டு அதன் வகைகளை சொல்லப் போனால் எண்ணில் அடங்க. அதே போல் இந்த காபி டீ போடுவது என்பதும் ஒரு தனி கலை தான். காபி கொஞ்சம் திக்காக இருந்தால் தான் குடிக்க நன்றாக இருக்கும். ஆனால் டீ தண்ணியாக இருக்க வேண்டும். அப்போது தான் அது குடிக்க நன்றாக இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு அருமையான மசாலா டீ எப்படி சுலபமாக வீட்டில் போடுவது என்பதை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

செய்முறை

இந்த மசாலா டீ போடுவதற்கு முதலில் ஒரு சிறிய துண்டு இஞ்சி ஒன்றும் பாதியுமாக நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் 3 ஏலக்காயையும் நசுக்கி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் பாலிற்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நான்கு லவங்கம், ஒரு சிறிய துண்டு பட்டை, நசுக்கி வைத்த இஞ்சி, ஏலக்காய் 3, டீ தூள் மூன்று ஸ்பூன் இத்துடன் கொஞ்சம் புதினா இலை அனைத்தும் சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும். இவையெல்லாம் நன்றாக கொதித்து அதன் சாறு முழுவதும் இறங்க ஐந்து நிமிடம் வரை ஆகும்.

- Advertisement -

இவையெல்லாம் கொதித்து சாறு இறங்கிய பிறகு ஒரு கப் அளவு நல்ல கெட்டியான காய்ச்சாத பாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாலை டிகாஷனில் ஊற்றும் போது அடுப்பை மீடியம் ஃப்ளேமில் மாற்றி வைத்து விட வேண்டும். சில நேரங்களில் மசாலாவில் பால் சேர்க்கும் போது பால் திரிந்து விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் 1 கப் ஜவ்வரிசி இருந்தா போதும் அசத்தலான சுவையில் 10 நிமிடத்தில் இப்படி லட்டு தயாரிக்கலாமே

இப்போது டிகாஷனில் பால் சேர்த்த பிறகு ஐந்து நிமிடம் வரை மிடியும் ஃப்ளேமில் கொதித்த பிறகு மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஒரு முறை கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல சுவையான கமகமவென்று வாசத்தோடு மசாலா டீ தயார். தினமும் குடிக்கும் டீயை இது போல குடித்து பாருங்கள் டீ காபி பழக்கம் இல்லாதவர்கள் கூட தினமும் கேட்பார்கள்.

- Advertisement -