- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஜப்பானிய பெண்களின் அழகு ரகசியம்

ஜப்பானிய பெண்களின் அழகு ரகசியம்

- Advertisement -

இந்த உலகத்திலேயே மிகவும் இளமையான தோற்றம் அளிக்கக் கூடிய நபர்களாக பார்க்கும் பொழுது ஜப்பான் நாட்டு காரர்கள் தான் முதல் இடத்தை வகிக்கிறார்கள். இதற்கு அவர்களுடைய உணவு முறை ஒரு காரணமாக இருந்தாலும் அவர்கள் உபயோகப்படுத்தும் பேஸ் பேக்கும் ஒரு காரணமாகத்தான் திகழ்கிறது. அந்த ஃபேஸ் பேக்கை நாமும் பயன்படுத்தினால் அவர்களைப் போல இளமையான அதே சமயம் அழகான தோற்றத்தையும் பெற முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் ஜப்பானிய பெண்கள் பயன்படுத்தும் பேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஜப்பானிய பெண்களை பார்க்கும் பொழுது அவர்களின் வயதை நம்மால் கணக்கிட முடியாது. அதே சமயம் அவர்களுக்கு எந்தவித பருக்களோ, கரும்புள்ளிகளோ, வடுகளோ எதுவும் இருக்காது. அவர்களைப் போல அழகாக நாமும் மாறுவதற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய பேஸ் பேக்கை நாமும் பயன்படுத்தினால் போதும். இந்த பேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு நமக்கு சில பொருட்கள் தேவைப்படும்.

- Advertisement -

அவற்றில் மிகவும் பிரதானமாக திகழக்கூடியது அரிசி மற்றும் உருளைக்கிழங்கு. மூன்று ஸ்பூன் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதே போல் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகம் வரை அடுப்பில் வைத்து விடுங்கள். இது நன்றாக வெந்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு காட்டன் துணியை வைத்து அரைத்த இந்த விழுதை அதில் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கிரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் பேக்கை தயார் செய்ய ஒரு பவுலை எடுத்து அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு நாம் தயார் செய்து வைத்திருக்கும் கிரீமை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோள மாவு, ஒரு ஸ்பூன் அளவிற்கு பால் பவுடர், ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் இவற்றை சேர்த்து நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ளும். இப்பொழுது கிரீம் தயாராகி விட்டது. இந்த கிரீமை முகத்தை சுத்தம் செய்து விட்டு முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே உலர வைத்து விட வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு கழுவிய பிறகு ஏதாவது ஒரு மாய்ஸ்டரைசரை பயன்படுத்த வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் தொடர்ச்சியாக நாம் செய்து வர நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி முகத்தில் இளமையான தோற்றத்தை பெற முடியும். அதே போல் முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள், பருக்கள், கரும்புள்ளிகள், கருந்துட்டுக்கள் அனைத்தும் நீங்கி பிரகாசமான பொலிவான கண்ணாடி போன்ற சருமத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: வெற்றிலை ஃபேஸ் பேக்
இந்த அற்புதமான பேஸ் பேக்கை நாமும் உபயோகப்படுத்தி ஜப்பானிய பெண்கள் போல் இளமையான தோற்றத்தை பெறுவோம்.

சற்று முன்