ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி நம்முடைய சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெயில் காலம் என்றால் வேர்க்குரு, குளிர்காலம் என்றால் வறண்ட தன்மை. இப்படி நாம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றார் போல் நம்முடைய சருமத்தில் பாதிப்புகள் உண்டாவதை உணர்ந்திருக்கிறோம். இப்படி பாதிப்புகள் ஏற்படும் பொழுது அந்த காலத்தில் ஏற்றவாறு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பாதிப்பை சரி செய்யும் அளவிற்கு பேஸ் பேக்கை தயார் செய்து உபயோகப்படுத்தினால் நல்ல பலனை பெற முடியும். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய சரும பாதிப்பை நீக்க வெற்றிலை பேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.
வெயில் காலத்தில் அதிக அளவு வேர்வை வெளியாகும். இதனால் முகத்தில் ஒருவித பொலிவற்ற தன்மை ஏற்படும். மேலும் இந்த வெயில் காலத்தில் வேர்க்குரு ஏற்பட்டு முகத்தில் ஒருவித எரிச்சல் ஏற்படும். இதுவே பருக்கள் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு இந்த வெயில் காலம் என்பது மிகவும் சங்கடங்களை தரக்கூடிய காலமாகவே திகழும். இப்படி வெயிலினால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்குவதற்கு வெற்றிலை எப்படி உதவி செய்யும் என்று பார்ப்போம்.
இந்த பேஸ் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு கொழுந்து வெற்றிலை வேண்டும். இரண்டு வெற்றிலைகளை நன்றாக பொடியாக கிண்டி அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அது அரைப்படுவதற்கு தேவையான அளவு பன்னீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இது நைசாக அரைவதற்கு வாய்ப்புகள் இல்லை. நமக்கு சாறு தான் வேண்டும் என்பதால் இதை அப்படியே எடுத்து கசக்கி பிழிந்து சாரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு ஸ்பூன் பன்னீரை ஊற்றி அரைப்பதன் மூலம் இரண்டு ஸ்பூன் சாறு நமக்கு கிடைக்கும். இப்பொழுது இதனுடன் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். கடையில் வாங்கிய கற்றாழை செல்லாக இருந்தாலும் பரவாயில்லை. இயற்கையில் கிடைக்கக்கூடிய ஜெல்லாக இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கிரீம் பதத்திற்கு வரும்வரை கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது வெற்றிலை பேஸ்பேக் தயாராகிவிட்டது. இரவு படுக்க செல்வதற்கு முன்பாக குளிர்ந்த நீரினால் முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த கிரீமை எடுத்து முகம் கண்கள் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து விட்டு அப்படியே படுத்து தூங்க வேண்டும். இது கிரீம் போன்று தான் இருக்கும் என்பதால் இதை பயன்படுத்திய பிறகு முகத்தை கழுவ வேண்டும் என்ற எந்தவித அவசியமும் இல்லை.
இப்படி நாம் தினமும் செய்வதன் மூலம் முகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய வேர்க்குருகள் சுத்தமாக நீங்கிவிடும். வெற்றிலையில் இருக்கக்கூடிய மருத்துவத் தன்மையால் முகப்பருக்கள் உதிர்ந்து விடும். முகப்பருக்கள் உதிர்ந்த இடத்தில் இருக்கும் தழும்புகளும் நீங்கிவிடும். இதோடு மட்டுமல்லாமல் கண்ணிற்கு குளிர்ச்சியை தரும். வெயில் காலத்தில் உடல் உஷ்ணமாகி கண் எரிச்சல் முக எரிச்சல் ஏற்படும். அந்த எரிச்சல்களை இந்த ஃபேஸ் பேக் முற்றிலும் தவிர்த்து விடும்.
இதையும் படிக்கலாமே: நரை முடி பிரச்சனை தீர
மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய வெற்றிலையை இந்த முறையில் பயன்படுத்தி நம்முடைய முகத்தையும் கண்ணையும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வோம்.