- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகெட்ட காலமும் நல்ல காலமாக மாற வழிபாடு

கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட காலம் நல்ல காலமாகவும் ஒரு குறிப்பிட்ட காலம் கெட்ட காலமாகவும் இருக்கும். நல்ல காலம் வரும் பொழுது நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதே போல் கெட்ட காலம் வந்தால் நாம் தொட்டது எதுவுமே துலங்காது, எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையாது, கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்போம். அப்படி இருக்கக்கூடிய கெட்ட காலத்தையும் நல்ல காலமாக மாற்றுவதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தின் திசை நடக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் தான் அவர்களுடைய வாழ்க்கை அமையும். கெட்ட பலன்களை தரக்கூடிய கிரகங்களின் திசை நடக்கும் பொழுது இதற்கு முன் நாம் செய்த பாவங்களுக்குரிய பலனையும் சேர்த்து அனுபவிப்போம். அதே சமயம் நல்ல திசை நடக்கும் போது நாம் செய்த புண்ணியத்தின் பலனால் நமக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

- Advertisement -

அதனால் தான் வாழ்க்கையில் கெடுதல் என்ற ஒன்று நடந்தால் அது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும் என்றும், நல்லது நடந்தால் அதுவும் தொடர்ச்சியாகவே நடக்கும் என்றும் கூறப்படுகிறது. நம்முடைய கர்ம வினைகளின் பலனால் கெட்ட காலம் ஏற்படும்பொழுது நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றார் போல் பிரச்சினைகள் அதிகரிக்கும். அந்த சூழ்நிலையில் அந்த காலத்தை நல்ல காலமாக மாற்றவும் நம்முடைய பூர்வ புண்ணியத்தின் பலனை அதிகரிக்கவும் சில வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன.

அந்த வழிபாட்டு முறைகள் நம்முடைய காலக்கெடுதியை மாற்றக்கூடிய தன்மை உடையதாக இருக்கும். எந்த ஆலயத்தில் 24 மணி நேரமும் அணையா தீபம் எரிந்து கொண்டு இருக்கிறதோ அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும். அப்படி ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய ஜாதகத்தில் கெட்ட காலம் இருக்கும் பட்சத்தில் அந்த கெட்ட காலம் முடியும் வரை வீட்டிலேயே அணையா தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலும் நல்ல காலம் பிறப்பதற்குரிய வழி கிடைக்கும்.

- Advertisement -

இதை தவிர்த்து கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும் என்று கூறப்படுகிறது. அனுதினமும் காலபைரவரை வழிபாடு செய்யலாம் அல்லது காலபைரவருக்குரிய அஷ்டமி திதியிலும் வழிபாடு செய்யலாம். காலபைரவரை ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதில் கால பைரவருக்கு புனுகு சாற்றி வழிபாடு செய்வது, செவ்வாழை வைத்து வழிபாடு செய்வது, சிவப்பு துணியை வாங்கி கொடுத்து வழி செய்வது, செவ்வரளி மலர்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது, சிவப்பு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது, தயிர் அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது, திருமஞ்சனம் பொடியால் அபிஷேகம் செய்வது, சந்தன காப்பு செய்வது, இளநீர் அபிஷேகம் செய்வது, விபூதி அபிஷேகம் செய்வது என்று இவற்றில் எது நம்மால் முடியுமோ அதை ராகு காலத்தில் காலபைரவருக்கு செய்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளால் கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கை மேன்மையுற வழிபாடு

கால பைரவரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களும் அணையா தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கும் கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்