வாசலின் உடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வீட்டிலே சூப்பரான லிப் பாம் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுக்கப்புறம் உங்களுக்கு எப்பவுமே லிப்ஸ்டிக் தேவை படாது.

- Advertisement -

இப்போதெல்லாம் உதட்டை நல்ல நிறம் ஆக்கக் கூடிய ஜெல், லிப் பாம், லிப்ஸ்டிக் இன்னும் நிறைய அழகு சாதன பொருட்கள் மார்க்கெட்டில் வந்து விட்டது. ஆனாலும் நாம் வீட்டிலே அதிக செலவு இல்லாமல் அதே நேரத்தில் அதிக கெமிக்கலும் கலக்காமல் ஒரு அருமையான லிப் பாமை தயார் செய்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்த அழகுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அழகான உதட்டழகிற்கு லிப் பாம்:
இந்த லிப் பாம் தயாரிப்பதற்கு ஒரு பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் தோலை எல்லாம் சீவி சுத்தம் செய்த பிறகு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீரை ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது.

- Advertisement -

இப்போது அரைத்த இந்த பீட்ரூட்டை ஒரு மெல்லிய காட்டன் துணியில் போட்டு நன்றாக பிழிந்து அதன் சாரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் தண்ணீர் சேர்க்கவே கூடாது. ஒரு முறை பிழிந்து எடுத்து பீட்ரூட் சாறை இன்னொரு முறையும் வடிகட்டியில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பேன் வைத்து இந்த பீட்ரூட் சாறை அதில் ஊற்றி அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து சிறிது நேரம் கை விடாமல் கலந்து கொண்டே இருந்தால், இந்த பீட்ரூட் சாறு ஒரு கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற விடுங்கள்.

- Advertisement -

இந்த பீட்ரூட் பேஸ்ட் நன்றாக ஆறிய பிறகு ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் வாசலீனையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு சுத்தமான ட்ரான்ஸ்பரென்ட் கண்டெய்னர் பாக்ஸில் இந்த பேஸ்ட்டை போட்டு ப்ரீசரில் அரை மணி நேரம் வரை வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: குதிரைவால் மாதிரி இருந்த முடி எலிவால் மாதிரி ஆகிவிட்டதா? இனி கவலையை விடுங்க உங்க வீட்டில் வெந்தயமும், கருவேப்பிலையும் இருந்தா இப்படி செய்யுங்க போதும்!

இப்போது அரை மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் இருந்து இந்த பேஸ்ட்டை வெளியே எடுத்து லேசாக எடுத்து உங்கள் உதடுகளில் தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு அருமையான ஹோம் மேட் லிப்ஸம் தயாராகி விட்டது. இந்த லிப் பாமை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உங்கள் உதடு நிரந்தரமாக சிகப்பழகுக்கு மாறுவதுடன் உங்களுக்கு லிப்ஸ்டிக் போட வேண்டும் என்ற எண்ணமே வரவே வராது.

- Advertisement -