குதிரைவால் மாதிரி இருந்த முடி எலிவால் மாதிரி ஆகிவிட்டதா? இனி கவலையை விடுங்க உங்க வீட்டில் வெந்தயமும், கருவேப்பிலையும் இருந்தா இப்படி செய்யுங்க போதும்!

venthayam-karuvepilai-hair
- Advertisement -

தலைமுடி திடீரென வேகமாக உதிர்ந்து மீண்டும் வளராமல் மெலிந்து கொண்டே செல்லும். குதிரைவால் மாதிரி அடர்த்தியாக இருந்த முடி, சட்டுனு எலிவால் மாதிரி மாறிவிடும். அப்பொழுது தான் நாம் இருந்த முடியை இழந்து விட்டோமே என்று வருந்துவோம். இப்படியான சூழ்நிலையில் மீண்டும் குதிரைவால் போல முடி கொத்து கொத்தாக, அடர்த்தியாக வளர என்ன செய்தாலும் தீர்வு கிடைப்பது கிடையாது. ஆனால் இந்த இரண்டே பொருளில் எப்படி மீண்டும் பழைய நிலைக்கு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும், நீளமானதாகவும் மாற்றுவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை தலைமுடி உதிர்வை தடுத்து, மீண்டும் வளர செய்யக் கூடிய அற்புதமான ஆற்றல் படைத்த பொருட்களாகும். எவ்வளவோ பொருட்களை சேர்த்து நீங்கள் எவ்வளவு விஷயங்களை செய்து பார்த்திருப்பீர்கள் ஆனால் எளிதாக வீட்டில் கிடைக்கக் கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து ஒரு முறை எண்ணெய் தயாரித்து பாருங்கள், ஒரு முடி கூட இனி கொட்டாமல் உதிர்ந்த இடத்திலிருந்து மீண்டும் புதிய முடிகளும் முளைக்க துவங்கும். இதனால் தலைமுடி உதிர்வு கட்டுப்பட்டு அடர்த்தியாக வளர்வதை நீங்கள் உணரலாம்.

- Advertisement -

கேச வளர்ச்சிக்கு எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 100ml, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்.

கேச வளர்ச்சிக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தும் முறை:
நம்முடைய கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை வெந்தயம் மற்றும் கருவேப்பிலையில் நிறைந்து காணப்படுகிறது. 100 எம்எல் அளவிற்கு சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண எண்ணெய்களை காட்டிலும் செக்கில் ஆட்டிய எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கிறது.

- Advertisement -

ஒரு அடி கனமான வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை சேர்த்து லேசாக மூன்றில் இருந்து நான்கு நிமிடம் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அடுப்பை வைத்து வறுத்து எடுத்ததும் நன்கு ஆற வையுங்கள். இவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அல்லாமல் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே வாணலியில் 100ml செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை அப்படியே சேருங்கள். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள இந்த பவுடரையும் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் கொதித்து பவுடரில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு குளிர்ந்து ஆறியதும் ஒரு காட்டன் துணியில் ஊற்றி நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வடிகட்டிய எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
50 வயசிலும் 20 வயசு பொண்ணு போல அழகாக இருக்க ஒரு ஸ்பூன் அரிசியை வைத்து இந்த பேக்கை போடுங்க. உங்க முகம் பால் போல வெண்மையாக மாறுவதுடன் எப்போதும் இளமையான அழகு தோற்றத்துடன் இருக்கும்.

வாரம் ஒரு முறை இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்த பின்பு தலையை கீழே தொங்கியபடி குனிந்து கொள்ளுங்கள். தலை முடிக்கு நல்ல ஒரு ரத்த ஓட்டம் கிடைக்கும். அதன் பிறகு நீங்கள் சாதாரண ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு நன்கு அலசிக் கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிவிரைவாக தூண்டப்பட்டு நன்கு சீராக, அடர்த்தியான வகையில் முடி வளரும்.

- Advertisement -