வீட்டில் செலவே இல்லாத இந்த சிகப்பு மாஸ்க் சுண்டினால் சிவக்கும் அளவிற்கு நம்முடைய முகத்தை மாற்றுமா என்ன? ஆச்சரியமா இருக்கே!

beetroot-red-mask
- Advertisement -

சுண்டினால் ரத்தம் வரும் அளவிற்கு சிலருடைய முகம் வெள்ளை வெளேர் என இருக்கும். எல்லோருக்கும் இது போல இயற்கையாக, நல்ல சிகப்பான நிறம் உள்ள சருமம் வாய்ப்பது கிடையாது. இருக்கின்ற சருமத்தை மாசு, மருவற்றதாக நல்ல பொலிவுடன் இளமையான தேகத்தை அடைய அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இந்த அவசரமான உலகில் யாருக்கும் நேரமில்லை என்றாலும், தன்னுடைய முகத்தை ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி பராமரித்து வந்தால் நீண்ட காலம் முதிர்ச்சி அடையாமல், இளமையான தோற்றத்துடன் இருக்கலாம். இதற்கு 10 பைசா செலவில்லாமல் சிகப்பு மாஸ்க் ஒன்று ஒரு வாரம் போட்டு பாருங்கள். இது செம ஐடியாவா இருக்கேன்னு நீங்களே ஆச்சரியப்பட போறீங்க. சரி, இந்த சிகப்பு மாஸ்க் எப்படி தயாரிப்பது? எப்படி போட்டுக் கொள்வது? என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

இயற்கையாக சிகப்பு நிறம் கொடுப்பதற்கு பீட்ரூட்டை விட, ஒரு சிறந்த காய்கறி இருக்க முடியாது. அதிக சத்துள்ள இந்த பீட்ரூட் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கொடையாக இருக்கிறது. பீட்ரூட் சாப்பிடுபவர்களுக்கு ரத்தம் விருத்தி அடையும் என்று கூறுவார்கள். இது தேகத்திற்கும் நல்லது தான் என்றாலும், நம் வெளிப்புறமும் பீட்ரூட்டை இப்படி செய்யலாம்.

- Advertisement -

இதற்காக முதலில் ஒரு துண்டு அளவிற்கு பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு குட்டி குட்டியாக நறுக்கி வைத்தால் சரியாக இருக்கும். இந்த பீட்ரூட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வடித்த சாதத்தை சேர்க்க வேண்டும். வடித்த சாதத்தில் முகத்தை இறுக்கமடையும் சக்தி உண்டு. தளர்ந்த தேகம் இறுகி இளமையுடன் இருக்கும்.

பின்னர் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாலில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய முகத்தை பால் போல பொலிவாக மாற்றும். மாசுகள், மருக்கள் இருந்தாலும் அவற்றை அகற்றும் எளிய பொருளாக இருக்கிறது. பின்னர் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்கு உலர விட்டுவிட வேண்டும். எந்த அளவிற்கு இறுகி உலர்ந்து போகிறதோ, அந்த அளவிற்கு நல்லது. முகம் மட்டுமல்லாமல் கழுத்து பகுதிகளிலும் நீங்கள் ஏதாவது ஒரு மாஸ்க் பிரஷ் அல்லது பேசியல் பிரஸ் கொண்டு பூசிக் கொள்ள வேண்டும். எதுவுமே இல்லை என்றால் கைகளைக் கொண்டு பூசிக் கொள்ளலாம். நன்கு உலர்ந்து காய்ந்து இறுகியதும் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து முகத்தை துடைத்து எடுங்கள்.

முகத்தை நேரடியாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டாம். முகத்தை ஈரத்துணியால் லேசாக துடைத்து எடுத்த பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை ஒரு முறை கழுவி கொள்ளுங்கள். பிறகு பவுடர் எதுவும் போடக்கூடாது, அப்படியே விட்டுவிட வேண்டும். இது போல ஏழு நாட்கள் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர முகம் பளிச்சிட ஆரம்பிக்கும். முகத்தில் இருக்கும் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் அனைத்தும் நீங்கி தொட்டால் வழுக்கி கொண்டு போகும் அளவிற்கு நைசாக மாறும். ட்ரை பண்ணி பாருங்க, ஒரே வாரத்தில் ஆச்சரியப்படுவீங்க!

- Advertisement -