தினமும் 1 சொட்டு இதை எடுத்து உங்களுடைய முகத்தில் தடவிக் கொண்டாலே போதும். நீங்கள் வெறும் 10 நாட்களில் தங்கம் போல தகதகன்னு ஜொலிப்பீங்க!

face

வெறும் 10 நாட்களில் உங்களுடைய முகத்தை தகதகன்னு தங்கம் போல நிஜமாகவே ஜொலிக்க வைக்க முடியுங்க! இதற்கு அதிகப்படியான காசு கூட நாம் செலவு செய்ய தேவையில்லை. அத்தியாவசியமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளை வைத்து தான் இந்த சீரம் தயார் செய்யப் போகின்றோம். தினமும் இரவு தூங்கும் போது இதை ஒரு சொட்டு எடுத்து உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே வைத்து விட்டு, கண்ணுக்கே தெரியாமல் கண்ணாடி போல தடவி விட்டு விட வேண்டும். அதன் பின்பு அப்படியே தூங்கி விடவேண்டும். இரவு முழுவதும் இது உங்களுடைய முகத்தில் இருந்து வேலை செய்து, 10 நாட்களில் தங்கம் போல உங்களை மாற்ற தேவையான வேலைகளை அந்த சீரம் பார்த்துக்கொள்ளும்.

carrot

சரி, அது என்ன ரெமிடி? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க. இந்த சீரம் செய்வதற்கு கேரட், பீட்ரூட், கற்றாழை இந்த மூன்று பொருட்களுமே போதும். கேரட் பீட்ரூட் இரண்டுமே நன்றாக கழுவி, துருவி சாறு பிழிந்து சம அளவிலும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பீட்ரூட் மட்டும் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். கேரட் மட்டும் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

ஆனால் 2 டேபிள் ஸ்பூன் அளவு பீட்ரூட் சாறு, 2 டேபிள் ஸ்பூன் அளவு கேரட் சாறு இவை இரண்டையும் ஒன்றாக கலந்தால் ரிசல்ட் பெஸ்டாகத்தான் தான் கிடைக்கும். முதலில் ஒரு துருவலை எடுத்து கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். அந்த கேரட் துருவலை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து பிழிந்தால், கேரட்டில் இருந்து சாறு நன்றாகவே நமக்கு கிடைக்கும். ஃபிரஷ் கேரட் ஆக இருந்தால்.

Beetroot Juice

இதேபோல்தான் பீட்ரூடையும் நன்றாக துருவி விட்டு, அதை பிழிந்து எடுத்தாலே நமக்கு சாறு கிடைத்துவிடும். தண்ணீர் ஊற்றி எல்லாம் சாறு எடுக்கக்கூடாது. இயற்கையாகவே அதிலிருந்து கிடைக்கக் கூடியது தான் அதிக பலனை கொடுக்கும். இந்த இரண்டு சாறையும் சம விகிதத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு கற்றாழை ஜெல் இயற்கையாக கிடைத்தால் மிக மிக நல்லது. இல்லை என்றால் கடையில் வாங்கிய ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு சாறுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, 1 ஸ்பூனை வைத்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும். கற்றாழை ஜெல்லை உங்களுக்கு தேவையான அளவு, இந்த சாருடன் கலந்து கொள்ளலாம். ஆக மொத்தத்தில் இது உங்களுக்கு ஜெல் பதத்தில் கிடைக்க வேண்டும். இதை அப்படியே சிறிய கண்ணாடி பாட்டிலில் சேகரித்து, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். 15 நாட்களுக்கு மேல் ஆனாலும் கெட்டுப்போகாது.

alovera

இந்த சீரமை தினமும் இரவு தூங்கும் போது முகத்தில் கண்ணுக்கே தெரியாமல் அப்ளை செய்து கொண்டு தூங்கி விடவேண்டியதுதான். மறுநாள் காலை எப்போதும் போல உங்களது முகத்தை சோப்பு போட்டுக் கூட கழுவிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம். தொடர்ந்து 10 நாட்கள் இப்படி செய்யும் போது உங்களுடைய சருமம் பொலிவாக மாறுவதை உங்களால் உணர முடியும்.

face1

பத்து நாள் கழித்து நிறுத்திவிட வேண்டாம். தொடர்ந்து இந்த ஜெல்லை எத்தனை நாட்கள் பயன்படுத்தினாலும் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. எல்லாம் இயற்கையான பொருட்கள் தானே! உங்களுடைய உதட்டுக்கும் இந்த கிரீமை பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது லேசாக உதட்டில் தடவிக் கொண்டு வந்தால் உதடு அழகாக, இன்னும் ரோஜாப்பூ வண்ணத்தில் மாறும். உங்களுக்கு இந்த குறைப்பு பிடித்திருந்தால், நீங்கள் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!