கடந்த இரண்டு ஆண்களில் உலகின் வேறு எந்த பந்துவீச்சாளரும் படைக்காத விசித்திரமான சாதனை படைத்த இங்கி வீரர் – பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (22-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Holder

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதலில் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை துவங்கியது. அந்த அணியின் கெய்ல் 50 மற்றும் ஹெட்மயர் 104 ரன்கள் உதவியுடன் 289 ரங்களை அடித்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 10 ஓவர்கள் வீசி 62 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

அப்படி என்ன சாதனை படைத்தார் ஸ்டோக்ஸ் தெரியுமா : இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசியதால் மூலம் கடந்த இரண்டு வருடங்களிலும் 11300 பந்துகளுக்கு மேல் வீசியுள்ளார். இது சாதனையல்ல அந்த 11300 பந்துகளில் ஒரு பந்து கூட நோபால் இல்லை என்பதே அந்த சாதனை ஆகும். அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு நோபால் கூட இவர் தவறி வீசவில்லை என்பதுதான் இந்த சாதனை.

Ben-Stokes

தற்போது பலத்துடன் திகழும் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் என்றும் கூட பலரும் கூறிவருகின்றனர். அந்த தொடரில் இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் ஒரு ஆல்ரவுண்டராக அவர்களது அணியின் துருப்புசீட்டாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்கலாமே :

ஆமை வேகத்திலேயே விளையாடுபவர் என்று நினைத்த புஜாரா புயலாய் சுழன்று 20 போட்டியில் அதிவேக சதம் அடித்து சாதனை – ட்ரெண்டிங் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்