ஆமை வேகத்திலேயே விளையாடுபவர் என்று நினைத்த புஜாரா புயலாய் சுழன்று 20 போட்டியில் அதிவேக சதம் அடித்து சாதனை – ட்ரெண்டிங் வீடியோ

Pujara

இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்தை நிரப்பி பல ஆண்டுகளாக இந்திய அணியின் அடுத்த சுவராக இன்று வரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருபவர் புஜாரா.

pujara

இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போது மிகவும் பொறுமையாக ஆடும் பழக்கம் உடையவர். இதனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் மற்றும் வீரர்கள் அனைவருமே இவர் பேட்டிங் செய்ய வந்தால் அச்சம் அடைவர். அவுட் ஆகாமல் பலமணிநேரம் பல நூறு பந்துகளை சந்தித்து விளையாடுவார்.அனால், நல்ல ரன்களை இந்திய அணிக்கு பெற்று தந்துள்ளார்.

இப்படி பொறுமையாக ஆடி பார்த்த இவரை தற்போது நடந்து வரும் சையத் முஸ்டாக் டி20 போட்டிகளில் மிக சீற்றமாக பார்க்கிறோம். ஆம், டி20 போட்டியில் விளையாடிய இவர் தற்போது 60 பந்துகளில் சதம் அடித்தார். இவருக்கு சிக்ஸ் அடிக்க தெரியுமா என்று கூட இந்த போட்டியில் தான் தெரிந்து கொண்டோம். இதோ புஜாராவின் அந்த வைரல் வீடியோ :

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தேசிய அணியில் இடம்பிடித்து ஆடிவரும் இவர் தற்போது அனைத்து வகையான போட்டியிலும் இடம் கேட்பாரோ என்று தோன்றும் அளவிற்கு சிறப்பாக ஆடிவருகிறார்.

இதையும் படிக்கலாமே :

பேபி சிட்டர் விளம்பர முதல் பாகத்தை கடுமையாக விமர்சித்த ஹெய்டன் தற்போது அதே விளம்பரத்தின் இரண்டாம் பாகத்தில் சேவாக்குடன் நடித்துள்ளார் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்