பூண்டு பயன்கள்

poondu-logo

சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அது உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் போது சுவையை அதிகரிக்கவும், உடல் நலம் மேம்படவும் சில பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அப்படியான ஒரு உணவு பொருள் தான் பூண்டு. பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பூண்டு பயன்கள்

ரத்த அழுத்தம்
நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட நாற்பது வயதை தொடும் காலங்களில் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்திற்கு ஆண், பெண் என்ற பேதங்கள் கிடையாது. பூண்டு அல்லில்சிஸ்டின் என்படும் வேதிப்பொருளை தன்னகத்தே அதிகம் கொண்டது. இது ரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் சிறிதளவு பூண்டு சேர்த்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதயம்

உடலின் முக்கிய உறுப்பான இதயம் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். பூண்டு எத்தகைய இதயம் சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்ப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக பூண்டு சாப்பிடுபவர்களுக்கு இதயம் தசைகள் வலுவாகும். மேலும் இதயரத்தகுழாய்களில் கொழுப்பு படுவதையும் தடுக்கிறது.

- Advertisement -

எலும்புகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடலின் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.

வயிறு

பூண்டு கிருமி நாசினி வேதிப்பொருட்களை அதிகம் கொண்டதாகும். வயிற்றின் குடல்களில் பூச்சி தொந்தரவுகளால் அவதியுறுபவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் வாதத்தன்மை அதிகரிப்பதால் வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகளையும் பூண்டு நீக்கும். உணவை செரிமானம் செய்ய உதவும் அமிலங்களின் சமச்சீர் தன்மையை காக்கும்.சில பூண்டு பற்களை நன்றாக இடித்து ஒரு ஸ்பூன் அளவு வாயில் போட்டு, சிறிது வெண்ணீர் அருந்துவதால் வாயு கோளாறுகள், அஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

நீரிழிவு

நீரிழிவு எனும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் பூண்டு சாப்பிட்டு வந்தால்
அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வந்து, நீரிழிவு நோய் தீவிரமாகாமல் காக்கிறது. வாழ்நாள் முழுதும் நீரிழிவு நோயாளிகள் பூண்டு சாப்பிட்டு வருவது அவர்களின் உடல்நலத்தை மேலும் சீர்கெடாமல் பாதுகாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்று நோய்

டையாசல்பைடு, செலினியம் போன்ற வேதி பொருட்கள் பூண்டில் அதிகம் இருக்கின்றன. இந்த இரண்டு வேதிப்பொருட்களும் புற்று நோய் செல்களை மீண்டும் வளராமல் தடுக்க செய்யும் ஆற்றல் அதிகம் கொண்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், அவர்களின் புற்று நோயின் தீவிரத்தன்மையை குறைத்து அவர்களை, சிறிது சிறிதாக குணமைடையச்செய்யும்.

நச்சு நீக்கம்

தொழிற்சாலை அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்கள் அருந்தும் நீரில் மிகச்சிறிய அளவில் ஈயம், பாதரசம் போன்ற மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களின் கலவை இருக்கும். இப்படியான சூழல்களில் வசிப்பவர்கள் தினந்தோறும் அல்லது வாரத்தில் மூன்று முறையாவது உணவில் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் இந்த ரசாயனங்களின் நச்சு தன்மையை முறிக்கும்.

பெண்கள் பிரச்சனைகள்

சில பெண்களுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிறுநீர்கழிக்கும் போது மிகுந்த எரிச்சல், அரிப்பு போன்ற தொந்தரவுகளால் மிகவும் அவதியுறுவர். இப்படியான பாதிப்புகளை அனுபவிக்கும் பெண்கள் தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை விழுங்கி நீர் அருந்தி வர விரைவிலேயே அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.


கண்கள்

நமது முகத்தில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள் ஆகும். இந்த கண்கள் பாதிக்கப்படாமல் பார்த்துகொள்வது மிகவும் அவசியமாகும். பூண்டு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கண்களில் ஏற்படும் கண் அழுத்த பிரச்சனை நீங்கி, கண்பார்வைத்திறனை தெளிவாக்குகிறது. கண்களில் கருவிழியின் ஆற்றலையும் பூண்டில் இருக்கும் ரசாயனங்கள் மேம்படுத்துகிறது.

வாய், பற்கள் நலம்

பூண்டு கிருமிநாசினி வேதிப்பொருட்களை தன்னகத்தே அதிகம் கொண்டது. தினமும் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம், பற்களில் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது.
ஒவ்வொருநாளும் பூண்டை நன்கு மென்று சாப்பிட பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்றவை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
மிளகு பயன்கள்

பூண்டு பயன்கள் அல்லது பூண்டு மருத்துவ பயன்கள் அல்லது பூண்டு மருத்துவ குணங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த தகவல்களை அதிகம் அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Benefits of garlic in Tamil. It is also called as Poondu payangal in Tamil or Poondu palangal in Tamil. Poondu maruthuva payangal are listed completely above.