நாளை தை அமாவாசை! நீங்கள் செய்யும் பூஜையில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும். முன்னோர்கள் முழுமனதோடு நீங்கள் செய்கின்ற பூஜையை ஏற்றுக் கொள்வார்கள்.

tharpanam
- Advertisement -

மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில், திதி தர்ப்பணம் கொடுக்காதவர்களும் கூட, கட்டாயம் இந்த தை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறாமல் செய்து விடவேண்டும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை முறையாக செய்யாமல் விட்டு விட்டால், இல்லத்தில் நிச்சயமாக தீராத கஷ்டங்களும் துயரங்களும் வந்து கொண்டே தான் இருக்கும். இதற்காக முன்னோர்கள் நமக்கு சாபம் கொடுக்கிறார்கள் என்பது அர்த்தம் கிடையாது.

tharpanam-1

நம்முடைய சந்ததியர்கள் நம்மை மறந்து விட்டார்களே என்று அவர்களுடைய ஆத்மா ஒரு சிறு துளி அளவு ஏக்கம் அடைந்தாலும் அது நம் குடும்பத்திற்கு சபமாக மாறிவிடும். இதைத்தான் பித்ரு தோஷம் பித்ரு சாபம் என்று கூறி, கஷ்டங்கள் தீர பரிகாரங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

- Advertisement -

முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை சரியான முறையில் கொடுத்து வந்தாலே பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்ற பிரச்சினைக்கு இடமே கிடையாது. வாழ்வில் வரக்கூடிய பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சரி நாளை அவரவர் வீட்டு வழக்கப்படி உங்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை செய்ய மறந்து விடாதீர்கள். இது மிக மிக முக்கியமான நாள். நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டியது மிக மிக அவசியம்.

thulasi-theertham

எந்த ஒரு பூஜை புனஸ்காரமாக இருந்தாலும், நாம் அறிந்தோ அறியாமலோ இறைவனுக்காகவும், நம் முன்னோர்களுக்காகவும் படைக்கக் கூடிய பொருட்களில் கண்ணுக்குத்தெரியாத தோஷம் தீட்டும் மறைந்து தான் இருக்கும். அந்த தோஷமும் தீட்டும் நம்முடைய பூஜை புனஸ்காரங்களை எந்தவிதத்திலும் பாதித்து விடக்கூடாது.

- Advertisement -

கண்ணுக்குத் தெரியாத எந்த ஒரு தோஷத்தையும், எந்த ஒரு தீட்டையும் புனிதப்படுத்த கூடிய சக்தி துளசி இலைகளுக்கு உண்டு. நாளை உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய முன்னோர்களின் புகைப்படங்களுக்கு துளசி இலைகள் கலந்த பூ மாலையை அணிவிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். முடிந்தால் வெறும் துளசி இலைகளை மாலையாக தொடுத்தும் முன்னோர்களுக் போடலாம்.

thulasi

இதோடு சேர்த்து பூஜையில் வைக்க கூடிய பஞ்ச பாத்திரத்தில் இரண்டு துளசி இலைகளை போட்டு விடுங்கள். அதன் பின்பு பூஜை அறையில், பூஜை தொடங்குவதற்கு முன்பு அந்த பஞ்ச பாத்திரத்திலிருந்து கொஞ்சமாக தண்ணீரை எடுத்து உங்களது உள்ளங்கைகளில் ஊற்றி, இரண்டு கைகளையும் நனைத்துக் கொண்டு, அதன் பின்பு உங்களது பூஜையை செய்தால் நீங்கள் அறியாமல் செய்த தவறுகளும் சுத்தமாகிவிடும்.(இதோடு சேர்த்து வழக்கம் போல, உங்கள் வீட்டு வழக்கப்படி முன்னோர்களுக்கு என்ன பொருட்களையெல்லாம் சமைத்து இலை போடுவீர்களோ, அதையும் செய்ய மறந்து விட வேண்டாம்.)

- Advertisement -

thulasi-perumal

பூஜையில் கண்ணுக்குத் தெரியாத, அறியாத நமக்கே தெரியாத தவறுகளின் மூலமாகவும், சிக்கல்கள் வருவதற்கு, தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் செய்யும் பூஜை முழுமையாக நிறைவு பெற நிச்சயமாக நாளை உங்களுடைய வீட்டில் இந்த துளசி இலைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதோடு சேர்த்து உங்களது எண்ணங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். உடல் சுத்தத்தோடும் மன சுற்றத்தோடும் நாம் செய்யக்கூடிய எந்த பூஜையாக இருந்தாலும் அது முழுமையான பலனைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை மறுநாள் தை அமாவாசை. இதை எல்லாம் மறக்காமல் செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -