எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன் தெரியுமா ?

Garudan God

பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். திருமாலின் வாகனமாக இருக்கும் இவர், காசிபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை பெரிய திருவடி என்றும் அழைப்பதுண்டு.

Garudan

வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன். ஒருவரை பாம்பு தீண்டி விஷம் ஏறினால் கருட வித்தியா மந்திரங்களை செபிப்பதன் மூலம் விஷ முறிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கையில் கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் பூர்த்தியடைகிறது. இப்படி பல சிறப்புகள் பெற்ற கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

Garudan

ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக தீராத நோய்கள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

- Advertisement -

திங்கள்:
திங்கட்கிழமை கருடனை தரிசிப்பதன் பயனாக குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சொந்தங்களிடையே மனஸ்தாபங்கள் நீங்கும்.

Garudan

செவ்வாய்:
செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பதன் பயனாக தைரியம் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும்.

புதன்:
புதன்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் அனைவரும் அழிவர். எதிரியற்ற நிலை உருவாகும்.

வியாழன்:
வியாழக்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக ஆயுள் அதிகரிக்கும், கண்டங்கள் விலகும்.

Garudan

வெள்ளி:
வெள்ளிக்கிழமையில் கருடனை தரிசிப்பதன் பயனாக கடன் தொல்லை நீங்கும், பண வரவு அதிகரிக்கும்.

சனி:
சனிக்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும்.

Garudan

கருடனை தினம்தோறும் வணங்குவதன் பயனாக நாக தோஷம் நீங்கும், தோல் வியாதிகள் குணமடையும், திருமணமான பெண்களுக்கு அறிவும் ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும், தீராத நோய்க்கும் தீரும்.

இதையும் படிக்கலாமே:
கருடனை தரிசிக்கையில் கூற வேண்டிய கருட காயத்ரி மந்திரம்

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் கருடன் பிறந்தமையால் அந்த நன்னாளில் கருடனை தரிசிப்பூருக்கு சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.