நல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்

perumal-3

இந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின் மரபு. கருடனை வழிபடும் சமயத்தில் கூற வேண்டிய ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. அதை ஜெபிப்பதன் மூலம் நல்ல காரியங்கள் விரைவில் நடக்கும். இதோ அந்த அற்புதமான கருட காயத்ரி மந்திரம்.

Manthra

கருட காயத்ரி மந்திரம்

‘ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

பொருள்:
பரம புருஷனை அறிந்துகொண்டு அவரை நினைத்து தியானம் செய்வோம். கருட பகவானாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார் என்பதே இதன் பொருள்.

இதையும் படிக்கலாமே:
திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்

கருடனை வழிபடும் சமயங்களில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் நம்மை விஷப்பூச்சிகள் அண்டாது. அதோடு பகையும் ஆபத்தும் விலகும். கருடன், பகவான் விஷ்ணுவின் வாகனம் என்பதால் நாம் கருடனை வணங்குவதன் பயனாக அவர் நம் கோரிக்கைகளை பகவான் விஷ்ணுவிடம் நேரடியாக சென்று சேர்ப்பார் என்பது நம்பிக்கை.