உங்கள் வீட்டில் பீரோ கண்ணாடி அடிக்கடி உடைந்து விடுகிறதா? அதற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்!

bero-arthanareeswarar
- Advertisement -

ஒரு வீட்டில் அடிக்கடி அபசகுனமாக ஒரு விஷயம் நடக்கும் பொழுது அங்கு எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து இருக்கும். நம் கண்களுக்கு புலப்படாத இந்த எதிர்மறை ஆற்றல்கள் தெய்வ அருளால் சில பொருட்கள் மூலம் நமக்கு அறிகுறிகளாக காட்டிக் கொடுக்கின்றன. அந்த வகையில் நம் வீட்டில் அடிக்கடி அபசகுனமாக பீரோ கண்ணாடி உடைவது எதனால்? இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு வீட்டில் திடீரென அடிக்கடி ரத்த காவு ஏற்படுவது போல விலங்குகள் அல்லது பறவைகள் மரணிப்பது அல்லது அடிபடுவது போன்ற விஷயங்கள் நடக்கும் பொழுது அங்கு எதிர்மறை ஆற்றல்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். துர்தேவதைகள், துர்சக்திகளின் நடமாட்டம் அங்கு இருப்பதால் நமக்கு இவ்வாறு நடக்கும்.

- Advertisement -

பறவைகள் செத்து கிடப்பது, அணில் போன்ற சிறு ஜந்துக்கள் மடிந்து கிடப்பது அல்லது அடிபட்டு இரத்தம் சிந்துவது போன்ற விஷயங்களெல்லாம் நம் வீட்டில் அடிக்கடி நடக்கும் பொழுது அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை நடந்தால் அது பிரச்சினையில்லை, ஆனால் தொடர்ந்து இது போல பல சம்பவங்கள் நடக்கும் பொழுது உடனே உங்கள் குல தெய்வ அருளைப் பெற்றுக் கொள்வது நல்லது. குலதெய்வ சாபம் இருப்பவர்களுக்கு இது போல அறிகுறிகள் ஏற்படுவது உண்டு.

பட்ட காலிலே படும் என்று சொல்வது போல குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தொடர்ந்து அடிபடுவது அல்லது உடம்பு சரி இல்லாமல் போவது போன்றவை ஏற்பட்டால் அவர்களுக்கு ஏதாவது ஒரு சாபம் பின் தொடர்வதாக கொள்ளலாம். இப்படி அடிக்கடி ஒரு விஷயம் நடக்கும் பொழுது அங்கு எதிர்வினைகள் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது. அந்த வகையில் அடிக்கடி உங்களுடைய பீரோ கண்ணாடி உடைந்து போகிறது என்றால் அங்கு கணவன், மனைவிக்குள் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

சிறு சிறு வாக்கு வாதங்கள், சிறுசிறு மனக் கசப்புகளும் நாளடைவில் பெரிதாகி அது வெறுப்பாக மாறி விடுகிறது. இந்த வெறுப்பு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல், பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுடைய பீரோ கண்ணாடி அடிக்கடி உடைந்து போகிறது என்றால் நீங்கள் அர்தநாரீஸ்வரர் படத்தை வைத்து வழிபட்டு வரலாம் அல்லது அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம். சிவனும், சக்தியும் ஈருயிர் ஓருடலாக இணைந்து இருக்கும் இந்த அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும்.

இரவு நேரங்களில் எப்பொழுதும் கணவன், மனைவி படுத்து உறங்கும் அறையில் இருக்கும் கண்ணாடி மூடி வைத்திருக்க வேண்டும். பீரோ கண்ணாடி ஆக இருந்தாலும் அதற்கு ஒரு சிறு திரை போட்டு மூடி வைத்திருக்க வேண்டும். கண்ணாடி என்பது ஒரு சாதாரண பொருள் அல்ல! நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நமக்கு காட்டிக் கொடுக்கும் காலக்கண்ணாடி ஆகவும் செயல்படுகிறது. வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைந்தாலும், மீன் தொட்டி, விலை உயர்ந்த கண்ணாடிப் பொருட்கள் உடையும் போது அங்கு நமக்கு வந்த வினை, கண்ணாடி எடுத்துக் கொண்டது என்று சொல்ல முடியும்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று நினைத்து அதனை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். கண்ணாடிப் பொருட்கள் உடைந்தால் அதனை வீட்டில் வைத்திருக்க கூடாது அதனை உடனே தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு புதிய கண்ணாடியை மாட்டி விட வேண்டும். பீரோ கண்ணாடி உடைந்து விட்டது என்று பலரும் அதனை அப்படியே விட்டுவிடுவது உண்டு. பீரோ கண்ணாடி உடைந்து விட்டால், அதை குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் புதிதாக மாற்றி விட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகிச் செல்லும்.

- Advertisement -