பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதுமே!

pachai-karpooram-javvathu

பணமே வாழ்க்கை ஆகிவிடாது என்றாலும் பணம் தான் வாழ்க்கைக்கு பிரதானமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் நம்முடன் இருப்பவர்கள் கூட நம்மை மதிப்பதில்லை. பணம் பணம் என்று அலைந்து நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய மொத்த வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். பணத்தை சம்பாதிப்பது சிரமமான ஒன்றாக இருந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது என்பதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. பணத்தை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money4

நீங்கள் கஷ்டப்பட்டு இளம் வயதில் ஓடியாடி உழைத்து சம்பாதித்தாலும் அதனை வாழ்நாள் முடிந்த பிறகு அனுபவித்து எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. வாழ்க்கையை கொஞ்சம் காசு இருந்தால் கூட இனிமையாக அனுபவித்துக் கொண்டே வாழ வேண்டும். வாழ்க்கையை தொலைத்து தான் பணத்தை ஈட்ட வேண்டும் என்பது இன்றைய மக்களுடைய தவறான கருத்தாக உள்ளது.

நீங்கள் ஒவ்வொருவரும் சற்று சிந்தித்துப் பார்த்தால் கூட உண்மை உங்களுக்கும் புரியும். 10000 ரூபாய் சம்பாதித்தால் கூட அதை தாராளமாக செலவு செய்யுங்கள். செலவு செய்வதில் தான் வரவும் அடங்கி இருக்கிறது என்னும் சூட்சமத்தை புரிந்து கொண்டால் யாரும் பீரோவில் பணத்தைப் பூட்டி வைக்க மாட்டார்கள்.

money

எந்த அளவிற்கு ஒரு மனிதன் செலவு செய்து வருகிறானோ அந்த அளவிற்கு அவனிடம் பணமானது தானாகவே வந்து சேர்வதாக தாந்திரீக மற்றும் வேத சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. இறைக்கிற கிணறு தான் மீண்டும் ஊரும். அது போல செலவு செய்ய செய்ய தான் பணமும் சேரும்.

- Advertisement -

நீங்கள் செய்யும் செலவானது உங்களுக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக இருந்தால் இன்னும் பணமானது எங்கே இருந்து வரும் என்று தெரியாது ஆனால் பல வழிகளில் இருந்தும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டே இருக்கும். அத்தகைய பணத்தை பீரோவில் எப்படி கட்டு கட்டாக சேர வைப்பது தெரியுமா?

pachai-karpooram1

பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம் பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் வெறும் பச்சை கற்பூரத்தை மட்டும் வைத்திருந்தால் பணமானது கொட்டோ கொட்டு என்று கொட்டுவதில்லை. நீங்கள் உழைக்கின்ற பணத்தை அதனுடன் சேர்த்து வைக்க வேண்டும். மாத சம்பளம், தினக்கூலி, வார சம்பளம் என்று நீங்கள் எந்த வகையில் சம்பாதித்தாலும் உங்களுடைய சம்பள பணத்தை கையில் வாங்கி வந்து வீட்டிற்குள் முதல் முதலாக பீரோவில் தான் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுது அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு குங்குமம் மற்றும் சிறிதளவு ஜவ்வாது சேர்த்து வைக்க வேண்டும்.

pichai-thanam

நீங்கள் இன்று பணத்தை வைத்தால் அடுத்த மறுநாள் வரை அந்த பணமானது அப்படியே இருக்க வேண்டும் செலவு செய்யக்கூடாது. அந்த பணத்தில் இருந்து முதல் செலவாக நீங்கள் உங்களுக்காக செய்யாமல் மற்றவர்களுக்காக, ஏழை, எளியவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் செலவு செய்து வந்தால் அந்த இடத்தில் மகாலட்சுமி ஆனவள் நிரந்தரமாக அருள் புரிவாள் என்கிறது சாஸ்திரம். மறுமுறை அந்த பணத்தை வைக்கும் வரை மற்ற எந்த பொருட்களையும் நீங்கள் அதிலிருந்து மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

bero

ஒரு சிறிய தாம்பூல தட்டு அல்லது சிவப்பு நிற பட்டுத் துணி ஒன்றை பீரோவில் விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் மேற்கூறிய பொருட்களை எல்லாம் வைத்து நீங்கள் வாங்கும் சம்பளத்தை சேர்த்து வைத்து விடுங்கள். முதல் செலவாக யாருக்காவது பசி என்று வருவோருக்கு உணவு வாங்கிக் கொடுங்கள் போதும். இப்படியாக இந்த வகையில் நீங்கள் மற்றவர்களுக்கு அந்த பணத்தை செலவு செய்தால்! நிச்சயம் உங்களிடம் பணம் கட்டுக் கட்டாக சேரும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.