பீரோவில் பணம் வைப்பவர்கள் இப்படி வைத்தால் உங்களிடம் கண்டிப்பாக பணம் சேரவே சேராது! பீரோவில் பணத்தை வைக்கும் முறை என்ன?

bero-money-cash
- Advertisement -

பணத்தை எப்பொழுதும் பாதுகாப்பான இடங்களில் தான் நாம் வைப்பது உண்டு. குறிப்பாக எல்லோருடைய இல்லத்திலும் இருக்கக்கூடிய பீரோவில் தான் பணத்தை பூட்டி வைக்கிறோம். இத்தகைய பீரோ பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கிறது. பீரோவில் பணத்தை வைக்கும் பொழுது இப்படி வைத்தால் உங்களிடம் பணமானது நிலைக்கவே செய்யாது. வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு வழியில் செலவுகள் வந்து பணம் காலி ஆகிவிடும். இப்படி இல்லாமல் பீரோவில் பணத்தை எப்படி வைத்தால் மென்மேலும் பணம் சேரும்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பணத்தை மரத்தினால் ஆன பொருட்களின் மீது தான் நாம் வைக்க வேண்டும். இதனால் இரும்பு பீரோவை விட, மர பீரோ பயன்படுத்தினால் பணமானது அதிகமாக சேரும். தேக்கு மரம் என்பது தேக்கி வைக்கக் கூடிய அமைப்பை கொண்டுள்ளது என்பதால், தேக்கு மரத்தால் ஆன பெட்டியில் பணத்தை வைத்தால் அதிக அளவு பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

இன்று எல்லோரிடமும் இரும்பு பீரோக்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இரும்பு, சனி பகவானுடைய ஆதிக்கம் பெற்றுள்ளதால் எல்லா விதங்களிலும் நன்மை செய்யாது. இரும்பு பீரோ வைத்திருப்பவர்கள், அதில் பணத்தை நேரடியாக அப்படியே கொண்டு போய் வைக்கவே கூடாது. பீரோவை வடக்கு பார்த்தபடி வைத்துவிட்டு, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சிறிய அளவிலான மரக்கலன் ஒன்றை வைத்து அதன் மீது நீங்கள் பணத்தை வைக்கலாம். இப்படி மரக்கட்டையின் மீது பணத்தை வைத்து, அதன் பிம்பம் கண்ணாடியில் தெரியும்படி ஒரு சிறிய அளவிலான கண்ணாடி ஒன்றையும் வடக்கு பார்த்தபடி அதற்குள் நீங்கள் வைத்தால் செல்வமானது வீண் விரயம் ஆகாது மென்மேலும் பணம் பெருகும்.

நிலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதே போல பீரோவில் பணம் இருக்கும் இடங்களில் எல்லாம், மகாலட்சுமி வாசம் செய்கிறார். எனவே இத்தகைய கதவுகளை அடிக்கடி ஆட்டி பார்க்க கூடாது. குழந்தைகள் வெறுமனே பீரோவை திறந்து ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். இது போல செய்தால் நம் பொருளாதாரமும் ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

- Advertisement -

இரும்பு பீரோவில் இரும்பு சார்ந்த பொருட்கள் அல்லது அலுமினியம் சார்ந்த பொருட்களை வைக்கவே கூடாது. இவை இரண்டும் தரித்திரத்தை உண்டாக்கக் கூடியவை, எனவே இவற்றை பீரோவில் கொண்டு போய் எந்த காரணம் கொண்டும் வைக்காதீர்கள். பீரோவில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அங்கு வாசமிகுந்த பொருட்களை போட்டு வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய், சோம்பு போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்தால், பீரோவை திறந்தாலே தெய்வீக மனம் கமலும் படியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
2023 சோபகிருது தமிழ் புத்தாண்டில் மக்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது தெரியுமா?

அது மட்டுமல்லாமல் பீரோவை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூசு படியவிட கூடவே கூடாது. இது மூதேவியை அழைக்க கூடியதாக இருப்பதால் பணம் நீங்கள் வைத்தாலும், அது சேராமல் உடனுக்குடன் ஏதாவது ஒரு வழியில் செலவாகிக் கொண்டே இருக்கும். எனவே அழகாக பீரோவை சுத்தம் செய்து துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணிமணிகளை அழகாக நேர்த்தியாக அடுக்கி வைக்க வேண்டும். கஜலட்சுமி படம் ஒன்றை பச்சை நிற புடவை கட்டி இரண்டு புறமும் கஜங்கள் அதாவது யானைகள் இருக்கும் படியான அமைப்பை பீரோவில் ஒட்டி வைக்கலாம். அதுபோல பூஜை செய்யும் பொழுது பீரோவிற்குள்ளும் நீங்கள் தூபங்கள் காண்பித்து, ஆரத்தி எடுக்க வேண்டும். இதுபோல நீங்கள் பீரோவை வைத்துக் கொண்டால் அதில் வைக்கும் பணமானது மென்மேலும் சேருமே தவிர கண்டிப்பாக குறையவே குறையாது.

- Advertisement -