2023 சோபகிருது தமிழ் புத்தாண்டில் மக்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது தெரியுமா?

panchangam-astro
- Advertisement -

2023 ஆம் ஆண்டில் சித்திரை மாதம் துவங்க இருக்கும் நிலையில் சோபகிருது வருடம் பிறக்கவிருக்கிறது. ஆங்கில புத்தாண்டை விட, தமிழ் புத்தாண்டுக்கு பொதுவாக மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இவ்வாண்டில் மழை எப்படி பொழியும்? மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை எல்லாம் சந்திக்கப் போகிறார்கள்? என்று பஞ்சாங்கம் கணித்திருக்கும். அதன்படி தமிழ் புத்தாண்டில் வரக்கூடிய மாற்றங்களை பற்றி பஞ்சாங்கம் கூறுவது என்ன? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

இந்த பதிவில் திருக்கணித பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் எப்படி இருக்கப் போகிறது? என்பது கணிக்கப்பட்டுள்ளது. சோப கிருது என்றால் சமஸ்கிருத மொழியில் ‘மங்கலம்’ என்ற பொருள் தருகிறது. இதுவரை இல்லாத நன்மைகள் யாவும் நடக்கவிருக்கிறது. இவ்வாண்டில் புத பகவான் அருள் பரிபூரணமாக இருப்பதால் பரவலாக மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சோபகிருது வருடம் வெண்பா பாடல்:
“சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்
உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகு மென்றே யுரை!!!!”

வெண்பா பொருள்:
இவ்வாண்டில் பஞ்சாங்கத்தில் உள்ள வெண்பாவின் படி பூமியில் வாழும் மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெறுவார்கள். அவர்களிடையே இருக்கக்கூடிய கோப குணங்கள் மறைந்து, போட்டி, பொறாமை இல்லாமல் நல்ல குணங்கள் மேலோங்க ஆரம்பிக்கும். சுப காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். உலகத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த நகரங்கள் யாவும் செழிப்படையும். மழை பொழிவிற்கு பஞ்சம் இருக்காது. இந்திய வானிலை ஆய்வின் படியும் இவ்வருடம் தென்மேற்கு பருவ மழை இயல்பாக இருக்கும் என்றும், புதிய புதிய வானியல் மாற்றங்களை காண கூடும் என்றும் கூறுகிறது. மேலும் பஞ்சாங்கத்தின்படி சூரியனில் அல்லது நட்சத்திரத்தில் அதிசயங்கள் நடக்கும். புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகும். இதனால் தமிழகத்திற்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கும்.

- Advertisement -

புதன் உடன் ராகு சேர்ந்து சனி, கேதுவின் பார்வை இவ்வருடத்தில் இருப்பதால் புண்ணிய காரியங்கள் மக்கள் அதிகம் செய்வார்கள். தெய்வ விசேஷங்களிலும் அதிகம் பங்கு கொண்டு சிறப்பாக நடத்துவார்கள். இரண்டாம் இடத்தில் செவ்வாயுடன், குருவின் பார்வையும் கிடைப்பதால் மக்கள் கையில் பணம் புழங்கும். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது. சொந்த வீடு, மனை வாங்கி வீடு கட்டி குடியேறக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மூன்றில் கேது அமர்ந்து சூரிய, புத, ராகு ஆகியோரின் பார்வை அமைய பெற்றிருப்பதால் கழுத்து, மூக்கு போன்றவற்றில் நோய்கள் அதிகரிக்கும் என்றும், புதுவிதமான கிருமிகளால் தாக்கப்படுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கில் சுக்கிரனுடன் குரு பார்வை இருப்பதால் தொழில் வளம் சிறக்க இருக்கிறது. குறிப்பாக ஜவுளி தொழில், பட்டு உற்பத்தி, தங்க வியாபாரம், கட்டுமான பொருட்கள் விற்பனை, விவசாயம் போன்றவற்றில் இருக்கக்கூடியவர்களுக்கு அதிகமான லாபம் காணக்கூடிய யோகம் உண்டாகப் போகிறது. இந்தத் துறையில் இருப்பவர்களின் தொழில் வளம் சிறக்கும் என்பதால் இவற்றை சார்ந்த மற்ற தொழில்களும் மென்மேலும் முன்னேற்றம் அடையும்.

இதையும் படிக்கலாமே:
தமிழ் புத்தாண்டு அன்று காலையில் கண் விழித்ததும் முதலில் இவற்றை எல்லாம் பார்த்து விடுவதோடு, இந்த இரண்டு பொருளையும் மறக்காமல் வாங்கி விட்டால் இந்த ஆண்டில் நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ்வது உறுதி.

கடல் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதாலும், மலைச்சரிவு காரணமாகவும் இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் இருக்கின்ற நாடுகள் பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் சிம்ம லக்னத்தில், கடக நவாம்சத்தில், சூரிய பகவான், மேஷ ராசியில், பகல் 2:59 மணிக்கு பிரவேசிக்க இருக்கிறார். அதனால் நாளை மாலை வேளையில் பூஜைகளை செய்து இவ்வருடம் சிறப்பாக அமைய, உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சம் பெருக, குடும்பம் செழிக்க இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

- Advertisement -