முதலாளி ஆவதற்கே பிறந்த 4 ராசிகள்? இவர்கள் மற்றவர்களுக்கு அடிமையாக வேலை செய்ய மாட்டார்களாம்!

astro-bossy

ஒரு சில பேர் மற்றவர்களுக்கு அடிமையாக வேலை செய்ய விரும்புவது இல்லை. ஆனால் அவர்களுடைய தலையெழுத்து வேறு வழி இல்லாமல் மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க இந்த ராசிகள்! தான் முதலாளி ஆவதற்கு என்றே பிறந்தவர்கள் என்கிற நினைப்புடன் இருப்பவர்களாம்! அப்படியான டாப் 4 ராசிகள் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் தான் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை விரும்புபவர்கள். இயல்பாகவே இவர்களிடம் தலைமையேற்கும் திறமை இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள்வதில் வல்லவர்களாக விளங்குவார்கள். சிறுவயதிலிருந்தே இவர்களுக்கு இப்பண்பு பிறப்புடன் வளர்ந்து கொண்டே வந்திருக்கும். திடீரென வேலை பார்க்கும் இடங்களில் முதலாளிகள் ஏதாவது கூறிவிட்டால் போதும், இவர்களால் அதனை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. குடும்பத்திற்காக வேறு வழியில்லாமல் அந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் பிறப்பிலேயே முதலாளித்துவம் கொண்ட குணங்களுடன் பிறந்திருப்பார்கள். மற்றவர்களின் குறைகளை கேட்பதற்கு இவர்கள் விரும்புவதில்லை, ஆனால் தூரத்திலிருந்தே அதனை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இவர்களை தலைமைப் பண்பில் சிறந்தவர்களாக கூறுவார்கள். சுற்றி இருப்பவர்கள் இவர்களுடைய பேச்சை கேட்கும் பொழுது ஈர்க்கப்படுவது உண்டு. எவரையும் எளிதில் ஈர்க்கும் பேச்சாற்றலும், திறமையும் இவர்களிடம் அதிகம் உண்டு. இவர்களுடைய சில நடவடிக்கைகள் அகங்காரம் கொண்டவர்களாக தோற்றமளித்து விடும். மிகவும் மன உறுதி கொண்ட இவர்கள் எதிலும் வெற்றி வாகை சூட பரபரப்புடன் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.

தனுசு:
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் தலைமைப்பண்பு கொண்டவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசி மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடக் கூடியவர்கள். இவர்கள் சொல்வதை மற்றவர்கள் விரும்பி கேட்பார்கள். அந்த அளவிற்கு அவர்களை வசியம் செய்யக்கூடிய ஆற்றல் இந்த ராசிக்கு உண்டு. சாதுரியமான பேச்சாற்றல் மற்றவர்களை எளிதில் எடை போடும் திறமை இவர்களுடைய தலைமை பண்புக்கு சான்றாகும். தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன்படி இவர்கள் நடப்பவர்கள். மற்றவர்களை ஒருபொழுதும் பின்பற்றுவதை இவர்கள் விரும்புவதில்லை.

மகரம்:
Magaram rasi
மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தனக்குத் தானே முதலாளி என்ற நினைப்புடன் இருப்பார்கள். தங்கள் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை விட முதலில் தங்களை தானே நம்புபவர்கள் மற்றும் அதிகமாக நேசிக்க கூடியவர்களும் ஆவார். தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கும் மகர ராசிகாரர்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். எதையும் பகுத்தறியும் குணாதிசயம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்கள் ஒரு முடிவை எடுத்தால் அது சரியாக இருக்கும் என்று மற்றவர்களும் நம்புவார்கள்.

இவர்கள் சற்று மெனக்கெட்டால் புத்திசாலிகளாக எல்லாவற்றையும் ஆளக்கூடிய திறமையை பெறுவார்கள். தத்தம் தசாபுத்திக்கு ஏற்ப இவர்களுக்கென ஒரு சூழ்நிலை வரும் பொழுது தாங்கள் யார்? என்பதை நிரூபித்து காட்ட கூடிய வல்லமை படைத்தவர்களாக விளங்குவார்கள். சரியான நேரம் பார்த்து எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு என்றும் தோல்வி இல்லை. இவர்களுக்கு அடுத்த நிலையில் கன்னி ராசிக்காரர்கள், கும்ப ராசிக்காரர்களும் இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் எல்லாம் மற்றவர்களுக்கு வேலை செய்யும் பொழுது ஒரு சகிப்புத்தன்மையுடன் தான் செய்வார்கள். தலைமை பண்பு இவர்களுடைய ராசியிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.