இரவில் படுத்தவுடன் உடனே தூக்கம் வர கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்?

sleep-gasagasa
- Advertisement -

தூக்கமின்மை என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சரியான தூக்கம் இல்லை என்றால் உடலில் இருக்கும் பலம் முழுவதும் நீங்கி சோர்வுடன் காணப்படுவீர்கள். இதனால் சரியான சிந்தனை இன்றி வெற்றியின் பாதையிலிருந்து திசை மாறி தோல்வியை சந்திப்பீர்கள். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இன்று ஒவ்வொருவரும் உணர மறுக்கின்றோம்! நாளை பிரச்சினை என்று வரும் பொழுது தான் இழந்த தூக்கத்தை தேட போகின்றோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. படுத்தவுடன் உடனே தூக்கம் வர இந்த 5 வழிகளை பின்பற்றி பார்க்கலாம். அவை என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

1. ஒரு மனிதன் தூங்குவதற்கு முதலில் உடலளவில் உழைப்பு தேவை. இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உடலைவிட மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகள் அதிகம். இதனால் படுத்தவுடன் சோர்வு நீங்கி தூக்கம் வருவது தடைப்படுகிறது. எனவே உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தது 10 நிமிடமாவது நன்கு உடற்பயிற்சி செய்து மட்டும் பாருங்கள் எப்படி தூக்கம் வரும் என்று உங்களுக்கே தெரியாது படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள்.

- Advertisement -

2. நீங்கள் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மருதாணி இலைகளை வைத்து தூங்கலாம். மருதாணி இலை என்னுடைய வாசம் தூக்கத்தை வரவழைக்கும் என்கிறது சாஸ்திரம். எனவே சிறிதளவுமருதாணி இலைகளை பறித்து வந்து தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு பாருங்கள். நிம்மதியான தூக்கமும் வரும் பக்தியும் அதிகரிக்கும்.

maruthani 2-compressed

3. நல்ல புத்தகங்களை வாசிப்பது என்பது நல்ல தூக்கத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. தூங்கும் பொழுது உங்களுக்கு பிடிக்கிறதோ! இல்லையோ! ஏதாவது ஒரு புத்தகத்தை கையில் வைத்து வாசித்து பாருங்கள் அல்லது உங்கள் கையில் இருக்கும் நவீன ரக தூக்கத்தை கெடுக்கும் மொபைல் போனில் புத்தகங்களை வாசியுங்கள். வாசிக்க தொடங்கிய பத்து நிமிடத்தில் தூக்கம் வரவில்லை என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

4. நீங்கள் சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரமாவது மெல்லிய நடைப் பயிற்சியை செய்து பாருங்கள். நடை பயிற்சி உடலையும், மனதையும் புத்துணர்வு பெறச் செய்யும். ஆனால் மூளைக்கு ஓய்வு தேவை என்பதை அறிவுறுத்தும். அரை மணி நேர நடைப் பயிற்சிக்கு பிறகு வீட்டிற்கு வந்து படுத்தால் போதும் ஐந்தே நிமிடத்தில் தூக்கம் வந்துவிடும். நீங்கள் தூங்கும் அறையில் அதிக வெளிச்சம் கட்டாயம் இருக்கக் கூடாது. தேவையில்லாத எஸ்எம்எஸ் அல்லது வீடியோக்களை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

gasagasa

5. நிம்மதியான நித்திரை பெற உடலுக்கு டானிக் கொடுக்க வேண்டும். அதற்கு இளம் சூடான பாலில் மைய அரைத்த கசகசா கலந்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து பாருங்கள். அற்புதமான தூக்கம் நிச்சயமாக உங்களுக்கு வரும். கசகசாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம் மூளையை சோர்வடைய செய்து நமக்கு தூக்கத்தை வரவழைக்கும். இரவில் பால் அருந்தி விட்டு, 2, 3 பேரீட்சை பழங்களை சாப்பிட்டுவிட்டு படுக்கும் பொழுது தூக்கத்திற்கு தேவையான மூலக்கூறுகளும், உடலுக்கு தேவையான வலிமையும் கிடைக்கும்.

- Advertisement -