2018ஆம் ஆண்டு சிறந்த வளர்ந்து வரும் வீரராக இந்திய அணியின் இளம்வீரர் தேர்வு – ஐ.சி.சி அறிவிப்பு

icc-awards
- Advertisement -

ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி கிரிக்கெட் நிர்வாகம் உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் நாடுகளில் இருந்து விளையாடும் வீரர்களை உற்று கவனித்து அதிலிருந்து சிறந்த ஒருநாள் போட்டி வீரர், டெஸ்ட் வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் என பல பிரிவுகளில் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது.

icc

சென்ற ஆண்டின் கிரிக்கெட் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், சிறந்த வளர்ந்துவரும் வீரராக 2018ஆம் ஆண்டு இந்திய அணியின் இளம் வீரர் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரராக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன பண்ட் அந்த தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து அசத்தினார். மேலும், அவர் அடித்த முதல் டெஸ்ட் ரன் சிக்ஸர் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

pant

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 159ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட்கீப்பிங் என சிறப்பாக செயல்பட்டு தொடரை வசப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நியூசிலாந்து மைதானத்தில் கோலிக்கு காத்திருக்கும் சவால் – இந்த சாதனை இந்த முறை முறியடிக்கப்படுமா ?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -