நியூசிலாந்து மைதானத்தில் கோலிக்கு காத்திருக்கும் சவால் – இந்த சாதனை இந்த முறை முறியடிக்கப்படுமா ?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இவ்விரு நியூசிலாந்தில் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நியூசிலாந்தில் துவங்குகிறது.

indian-team

இதற்காக இரு அணிவீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தொடர்களாக இந்திய அணி எதிர்அணிகளுக்கு கடும் சவாலை அளிக்கும் வகையில் விளையாடி கடும் வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் கேப்டனாக கோலிக்கு நியூசிலாந்து மண்ணில் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது அதனை இந்த தொடரில் முறியடிப்பாரா என்று இந்த தொடரில் தெரியவரும்.

அதாவது இதுவரை நியூசிலாந்து சென்ற இந்திய அணியின் கேப்டன் யாரும் சதம் அடித்ததில்லை. ஆனால், கோலி தான் விளையாடிய அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் அந்தந்த நாடுகளில் சதமடித்து உள்ளார். கோலியின் ஆட்டம் கடந்த சிலவருடங்களாக வேறலெவலில் உள்ளது. அதாவது அவர் ஒரு தொடரில் ஆடினால் நிச்சயம் சதமடிக்காமல் விடமாட்டார்.

koli

எனவே, கோலி கேப்டனாக கண்டிப்பாக இந்த நியூசிலாந்து தொடரில் சதமடிப்பார் என்று நம்பலாம். மேலும், இந்த தொடரினையும் இந்திய அணி கைப்பற்றும் வலிமையுடன் உள்ளது. இந்த தொடர் உலகக்கோப்பை முன்நடக்கும் தொடர் என்பதால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான தொடராகும்.

இதையும் படிக்கலாமே :

தோனியின் அனுபவம் அவருக்கு கைகொடுக்கலாம். ஆனால், நியூசிலாந்தில் அவர் இதனை செய்யமுடியாது – ராஸ் டெய்லர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்