நல்லபடியாக குழந்தை பிறக்க, கர்ப்பிணி பெண்கள் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? பிரசவ காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க, இந்த தவறுகளை கர்ப்பிணி பெண்கள் செய்யவே கூடாது.

pregnant-woman
- Advertisement -

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு காலகட்டம் ஆகும். கருவை வயிற்றில் சுமந்து, நல்லபடியாக பிள்ளை பேரு பெற்று எடுப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், எந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது, கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் எப்படி படுத்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்பதை பற்றிய ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை:
கர்ப்பிணி பெண்கள் என்றால் எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து, அன்றாடம் செய்யும் வேலையில் இருந்து, படுத்து உறங்கும் தூக்கம் வரை, எல்லாவற்றிலும் கவனம் தேவை. அதுவும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நிம்மதியான தூக்கம் கட்டாயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

சாதாரணமாக இருக்கும் மனிதர்களாலேயே இரவு நல்ல உறக்கம் இல்லை என்றால் உடல் உபாதைகள் அதிகம் ஏற்படும். அப்படி இருக்கும்போது கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவே தேவையில்லை. நல்ல தூக்கம் தான் அவர்களுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

மன அமைதியோடு நன்றாக ஓய்வு எடுத்து தூங்கினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த நாளங்கள் தங்களை தாங்களே புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி இருக்கும்போது குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

சரி, நன்றாக தூங்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதி வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. நன்றாக தூங்கவில்லை என்றால் மன அழுத்தம் ஏற்படும். ரத்த ஓட்டமும் சீராக இருக்காது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி தூங்க வேண்டும்?
கர்ப்பம் தரித்த பெண்கள் தெற்கு திசையில் தலையை வைத்து படுப்பது நல்லது என்று வாஸ்துபடி சொல்லப்பட்டுள்ளது. குழந்தை பேருக்காக முயற்சி செய்யும் ஆண்கள் பெண்கள் கூட தெற்கு பக்கம் தலை வைத்து படுத்து தூங்கலாம். கூடுமானவரை கர்ப்பம் தரித்த பெண்கள் கிழக்குப் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருப்பது நல்லது என்று சொல்வார்கள். காரணம் கிழக்கு பக்கம் வெப்பமான சூழ்நிலை இருக்கும்.

- Advertisement -

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் மூன்று மாதத்திற்கு பிறகு அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ரொம்ப நேரம் மல்லாக்க பார்த்து மாதிரி, நிமிர்ந்து படுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். முதல் மூன்று மாதங்கள் கழித்த பின்பு கர்ப்பிணி பெண்கள் ஒருகழித்து, அதாவது பக்கவாட்டில் படுப்பதுதான் நல்லது.

அதிலும் இடது பக்கம் திரும்பியது போல படுப்பது மிக மிக நல்லது. (கர்ப்பிணி பெண்கள் இடது பக்கம் திரும்பி படுத்தால் குழந்தையின் சுழற்சி அதிகரிக்கும். இதயத்திலிருந்து, கருப்பையோடு இணைந்திருக்கும் நஞ்சுக்கொடிக்கு தேவையான ரத்தத்தை சரியான அளவில் கொடுக்கவும், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து சீராக கிடைக்கும் கர்ப்பிணி பெண்கள் பெண்கள் இடது பக்கம் திரும்பி படுப்பது தான் நல்லது.)

ஒரே பக்கம், இடது பக்கமே படுக்க முடியாது எனும் பட்சத்தில், திரும்பி சிறிது நேரம் வலது பக்கம் படுக்கலாம் அதில் ஒன்றும் தவறு கிடையாது. இப்படி திரும்பி திரும்பி படுத்துக் கொள்ளலாம். வெகு நேரம் உங்களுடைய முதுகு, கட்டிலில் இருக்கும் படி படுக்கக் கூடாது. வயிறு கட்டிலில் அழுந்தும்படி குப்புற கர்ப்பிணி பெண்கள் ஒரு போதும் படுக்கக் கூடாது.

அதேபோல ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் திரும்பி படுக்கும்போது, நிறை மாத கர்ப்பிணிகள், எழுந்து உட்கார்த்துதான் இன்னொரு பக்கம் திரும்பி படுக்க வேண்டுமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. அப்படி கிடையாது. டக்குனு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் திரும்ப கூடாது. மெதுவாக ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் திரும்பி படுபதன் மூலம் கொடி சுற்றிக் கொள்ளுமோ என்று பயம் தேவை கிடையாது. அப்படியே மெதுவாக திரும்பி படுத்துக் கொள்ளலாம்.

அதேபோல நன்றாக தூங்கி முடித்துவிட்டு உடனடியாக எழுந்து உட்காரக்கூடாது. ஆற அமர பொறுமையாக தான், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் திரும்பி படுக்க வேண்டும். பொறுமையாக தான் எழுந்தும் அமர வேண்டும். ரொம்ப நேரம் மல்லாக்க படுக்கவே கூடாது. ரொம்ப நேரம் நிமிர்ந்து மல்லாக்க பார்த்தவாறு படுப்பதன் மூலம் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தின் போது ஒரு கழித்து படிப்பது தான் சிறந்தது.

இதையும் படிக்கலாமே: கறிக்குழம்பை கொண்டும் செல்லும்போது கூடையில் அடுப்பு கரித்துண்டை வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற காரணம் என்ன தெரியுமா?

இது தவிர செயற்கையாக கர்ப்பம் தரிப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் உங்களுடைய மருத்துவர் சொல்வதை சரியான முறையில் கேட்டு நடக்க வேண்டும். கூடவே, உங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு நடந்தால் பிரசவ காலத்தில் எந்த பயமும் இருக்காது. கர்ப்ப காலத்தில் பயம் தேவையே கிடையாது. அதேசமயம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -