இவர்தான் பெஸ்ட். 2018ஆம் ஆண்டின் சிறந்த நடுவராக இலங்கையை சேர்ந்த நடுவர் தேர்வு – ஐ.சி.சி அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி கிரிக்கெட் நிர்வாகம் உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் நாடுகளில் இருந்து விளையாடும் வீரர்களை உற்று கவனித்து அதிலிருந்து சிறந்த ஒருநாள் போட்டி கவனித்து டெஸ்ட் வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் என பல பிரிவுகளில் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது.

icc-awards

இந்நிலையில், 2018ஆம் ஆண்டின் சிறந்த நடுவருக்கான விருதினையும் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடுவருமான குமார் தர்மசேனா தேர்வுசெய்யப்பட்டார். இதனை ஐ.சி.சி அறிவித்தது.

இதனை ஐ.சி.சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதனை பார்த்த குமார் தர்மசேனா அந்த பதிவிற்கு பதிலளித்து தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு உங்களுக்காக :

இந்த விருதினை இரண்டாவது முறை பெறுகிறார். ஐ.சி.சி-யின் உலகக்கோப்பை தொடர் மற்றும் அனைத்து நாடுகளுக்கு இடையேயான போட்டிகளிலும் பங்கேற்று தர்மசேனா நடுவராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிக்கலாமே :

“ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்” விருதினை பெற்ற முன்னணி நியூசிலாந்து வீரர் – ஐ.சி.சி அறிவிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்