ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதினை பெற்ற முன்னணி நியூசிலாந்து வீரர் – ஐ.சி.சி அறிவிப்பு

newzealand

ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி கிரிக்கெட் நிர்வாகம் உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் நாடுகளில் இருந்து விளையாடும் வீரர்களை உற்று கவனித்து அதிலிருந்து சிறந்த ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் என பல பிரிவுகளில் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது.

icc-awards

இந்த வருடத்தின் மூன்று சிறந்த கிரிக்கெட்டர் விருதினையும் இந்திய அணியின் விராட் கோலி பெற்றார். இந்நிலையில் “ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்” என்கிற அவார்டை நியூசிலாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஆட்டக்காரருமான கேன் வில்லியம்சன் வென்றார்.

இதற்கான விருது அறிவிப்பினை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மேலும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் போட்டிகளின் மீதுள்ள அர்பணிப்புக்கான விருதாகும். இதோ அந்த விருதுக்கான பதிவு :

தற்போது நாளை துவங்க உள்ள ஒருநாள் போட்டியில் கேப்டனாக கோலி மற்றும் வில்லியம்சன் ஆகியோர் மோத உள்ளனர். இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்றே கூறலாம். இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இதையும் படிக்கலாமே :

ஐ.சி சி-யின் மூன்று வகையான விருதுகளையும் பெற்ற கோலி – மனம் நெகிழ்ந்த கோலி வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்