கடன் பிரச்சனையா? வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

vetrilai-lakshmi

வெற்றிலை வைத்து அந்த காலம் முதல் இந்த காலம் வரை மந்திர, தந்திரங்கள் செய்து பல விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். வெற்றிலையில் மை போட்டு பார்த்து குறி சொல்வது, எண்ணிக்கை வைத்து பிரசன்னம் பார்ப்பதும் இந்த முறையில் தான். உண்மையில் ஒரு சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் வசிய சக்தி உள்ளது. பணம் என்பது நிலையற்ற ஒன்று. நிலையில்லாதவற்றை சுலபமாக வசியம் செய்ய முடியும். நிலையான ஒன்றை தான் வசியம் செய்வது முடியாத காரியம். இது பல பேருக்கு புரியாத ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு கர்ம வினை எடுத்து கொள்வோம். கர்ம வினை என்பது நிலையான ஒன்று. நீங்கள் என்ன தான் செய்தாலும் செய்த பாவத்திற்கு வினை பயனை அடைந்தே தீர வேண்டும் என்பது விதி.

vetrilai

உங்களின் தற்போதைய பிரச்சனைகளுக்கு முன் ஜென்ம வினையே காரணமாக இருக்கும். பரிகாரம் செய்து, புண்ணியங்கள் செய்து அதன் தாக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளலாமே ஒழிய முற்றிலும் தப்பித்து கொள்ள முடியாது. ஏனெனில் கர்ம வினை நிலையான ஒன்று. நோய்கள் என்பதும் அவ்வாறே ஆகும். தீரா பிணிகளை குறைத்து கொள்ளத் தான் முடியும். முற்றிலும் நீக்கி விட முடியாது. பணம் என்பது நிலையற்ற ஒன்று. இன்று போகும். நாளை வரும். மஹாலக்ஷ்மி பணத்திற்கு தலைவியாக இருக்கிறார். அவரை குளிர்வித்தால் உங்களிடம் இருந்து எங்கும் போய்விட மாட்டார். வெற்றிலை தெய்வ கடாட்சம் பொருந்திய ஒரு மூலிகை. இந்த வெற்றிலையை வைத்து எப்படி பணத்தை வசியம் செய்ய முடியும் என்று இப்பவிதில் காணலாம்.

வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று ஆண் வெற்றிலை. ஆண் வெற்றிலை என்பது வெற்றிலையின் வலது புறம் அதிக இலை தன்மையுடன் இருக்கும். பெண் வெற்றிலை என்பது வெற்றிலையின் இடது புறம் அதிக இலை தன்மையுடன் இருக்கும். மேலும் வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும். பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. இவை இரண்டும் இந்த பரிகாரத்திற்கு உகந்தது அல்ல. இருபுறமும் சமமாக இருக்கும் நல்ல தெய்வ வெற்றிலையை 5 என்ற எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

vetrilai

மஞ்சலில் நனைத்த காட்டன் துணி சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த 5 வெற்றிலைகளை விரித்து அதில் 11 ஏலம், 11 கொட்டபாக்கு, அட்சதை எனப்படும் மஞ்சலில் நனைத்த அரிசி சிறிது வைத்து மொத்தமாக முடிந்து மஞ்சள் நூலில் மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். மூன்று முடிச்சு போடும் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். இது மஹாலக்ஷ்மி தேவிக்கு சமர்ப்பணம் என்ற பொருள் கொண்டது.

- Advertisement -

ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை ஸ்வாஹா!

பின்னர் இதை நீங்கள் பணப்பெட்டியில் வைத்து விட்டால் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தியை வெளிப்படுத்தும். பணப்பெட்டியில் வைத்து விட்டு இந்த மந்திரம் சொல்லி விட்டு சார்த்தி விடுங்கள்.

ஓம் ஸ்ரீம் யக் ஷாய குபேராய
வைஸ்வரனாய
தன தான்யாதி பதயே
தன தான்ய சம்ரித்திம்மே தேஹி
தாபய ஸ்வாஹா!!

cash-box

பொதுவாக பணத்தை மரப்பெட்டியில் வைப்பது தான் நல்லது. இதை செய்வதால் ஒன்றும் கெட்டுவிட போவதில்லை. பணமோ, நகையோ அதற்கென்று பிரத்யேக மரத்தால் ஆன பெட்டியை வாங்கி அதில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். மஹாலக்ஷ்மிக்கு பிடித்தவற்றை மந்திர உச்சாடனம் செய்து பரிகாரமாக செய்வதன் மூலம் வீண் விரயமாகாமல், கடன் பிரச்சனை இல்லாமல் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
நரகத்தை கூட சொர்க்கமாக மாற்ற எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு இப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam sera manthiram in Tamil. Panam nilaikka manthiram Tamil. Panam peruga pariharam Tamil. Panam sera pariharam Tamil. Panam sera mantra in Tamil.