நரகத்தை கூட சொர்க்கமாக மாற்ற எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு இப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்.

thiruneeru-1
- Advertisement -

சிவபெருமானை நினைத்து பூஜிப்பவர்களும், சிவனின் பக்தர்களாக இருப்பவர்களும், நிச்சயம் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நெற்றியின் மேல் திருநீறு பூசிக் கொண்டால், நம் தலையில் எழுதப்பட்டிருக்கும் தாறுமாறான தலையெழுத்து கூட சரியாகிவிடும் என்று சிவன் பக்தர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். பிரம்மனால் எழுதப்பட்ட தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தியானது இந்த திருநீறுக்கு உள்ளது என்று நமக்கு தெரிந்தால், சிவராத்திரி அன்று மட்டுமல்ல தினம்தோறும் திருநீற்றை நாம் நெற்றி நிறைய பூசி கொள்வோமா? மாட்டோமா? இது ஒரு பக்கம் இருக்க, இங்கு ஒருவர் திருநீரை முறையாக தினந்தோறும் பூசிக்கொண்டு எம்பெருமானை வழிபட்டதால் ஒரு நரகத்தையே, சொர்க்கமாக மாற்றி உள்ள வரலாற்று கதையை பற்றி தெரிந்தால், நிச்சயம் திருநீற்றின் மகிமையை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கான அந்த வரலாற்று கதை இதோ.

viboothi

சிவனடியாரான துர்வாச முனிவர், தினந்தோறும் காலையில் எழுந்து, அனைத்து காலை வேலைகளையும் முடித்துவிட்டு, சிவபெருமானை மனதில் நினைத்து திருநீற்றை நெற்றி முழுவதும் பூசிக்கொண்டு தன்னுடைய கடமைகளை தொடங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஒரு நாள் வழக்கம்போல் காலையில் திருநீற்றைப் பூசிக் கொண்டு பித்ரு லோகத்துக்கு செல்ல தொடங்கினார். அவர் தினந்தோறும் செல்லும் அந்த வழியில் திடீரென்று ஒரு கிணறு தெரிந்தது. வழக்கமாக செல்லும் பாதையில் இந்த கிணறு இதுநாள்வரை இல்லையே, அந்தக் கிணற்றில் என்ன இருக்கின்றது என்பதை சற்று எட்டிப் பார்த்தார். அந்த கிணற்றில் பாவம் செய்தவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டிருந்தனர். ‘இதில் பாவம் செய்தவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் முனிவர்’. அதாவது பாவம் செய்தவர்களை தள்ளி விடப்படும் நரக கிணறு அது.

- Advertisement -

ஆனால் அதிசயத்தைப் பாருங்கள்! துர்வாச முனிவர் எட்டிப் பார்த்துவிட்டு திரும்பிய மறுகணமே அந்த கிணறு சொர்க்கமாக மாறிவிட்டது. இது எப்படி நடந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? இதற்கான பதிலை இறுதியாக பார்ப்போம்.

durvasar

அந்த கிணற்றுக்குள் இருந்து ஆத்மாக்களை தொல்லை படுத்திய விஷ ஜந்துக்கள், கொடிய நாகங்கள் அனைத்தும் வாசனை மிகுந்த மலர்களாக மாறிவிட்டன. கொதிக்கின்ற தண்ணீர், குளிர்ந்த நீராக மாறிவிட்டது. வீசிய புயல் தென்றலாக மாறிவிட்டது. நாற்றம் நறுமணமாக மாறிவிட்டது. இத்தனை நாட்களாக துன்பத்தை அனுபவித்து வந்த ஆத்மாக்கள் அனைத்தும் மோட்சத்தை அடைந்தன.

- Advertisement -

இந்த நரக கிணற்றில் இருந்த ஆத்மாக்களை கொடுமை செய்து வந்த அரக்கர்கள், நடந்த இந்த அதிசயத்தைப் பார்த்து பயந்துபோய் எமதர்மனிடம் போய் முறையிட்டனர். ‘நரச கிணறு எப்படி சொர்கமாக மாறியது என்று தெரியாத எமன், பதற்றமடைந்து ஓடிவந்து அந்த கிணற்றை பார்த்தான்.’ சொர்க்கமாக மாறி கிணற்றை பார்த்தவுடன் எமன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். மேலோகத்தில் இருந்த இந்திரனும் இதைக் கண்டு ஓடிவந்து என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவித்தான். என்ன செய்வது? இறுதியாக ஈசனை தான் சரணடைய வேண்டும்.

sivan

குழப்பத்தில் இருந்த எமதர்மனும், இந்திரனும் ஈசனிடம் சென்று நரக கிணறு எப்படி சொர்க்க கிணறாக மாறியது என்பதற்கான காரணத்தை கேட்டனர். முக்காலத்தையும் அறிந்த எம்பெருமானுக்கு நரகம் எப்படி சொர்க்கமானது என்பது தெரியாமலா இருக்கும்?

- Advertisement -

சிவன் கூறியதாவது; ‘சிவன் அடியாரான துர்வாச முனிவர் திருநீற்றை முறைப்படி பூசிக்கொண்டு சதாகாலமும் எம் பெருமானை பூஜித்து வருபவர். அவர் எதிர்பாராமல் பித்ரு கிணற்றை எட்டிப் பார்த்தபோது, அவருடைய நெற்றியில் இருந்து ஒரு சொட்டு திருநீறானது அந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அந்த ஒரு துளி திருநீற்றின் மகிமையால் தான் இந்த நரக கிணறு, சொர்க்கமாக மாறி இருக்கின்றது.’ என்று விளக்கம் அளித்தார் சிவபெருமான்.

thiruneeru

துர்வாச முனிவர் தினம்தோறும் மோதிர விரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் இந்த மூன்றையும் சேர்த்து ‘ஓம்’ (அகார, உகார, மகார) என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் பூசிக் கொள்ளும் பழக்கத்தை உடையவர். இவ்வாறு முறையாக நெற்றியில் பூசப்படும் திருநீறுக்கு எவ்வளவு மகிமை உண்டு என்பதை இந்த கதையின் மூலம் நிச்சயமாக நீங்கள் அறிந்து இருப்பீர்கள் அல்லவா? இந்த சிவராத்திரி தினத்தில் இருந்து நெற்றியில் திருநீற்றை இந்த முறைப்படிப் பூசிக் கொள்வதை வழக்கமாக எடுத்துக் கொள்வோம். துர்வாச முனிவரால் போல், நம்மால் நரகத்தை சொர்க்கமாக மாற்ற முடியவில்லை என்றாலும், நம்முடைய வாழ்க்கையை நாமே சொர்கமாக மாற்றிக் கொள்ள இது ஒரு நல்ல வழி.

இதையும் படிக்கலாமே
மஹா சிவராத்திரி அன்று இரட்டிப்பு பலன் அடைய இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vibhuti benefits in Tamil. Thiruneeru magimai. Thiruneeru uses in Tamil. Sivan thiruneeru.

- Advertisement -