வெற்றியைத் தரும் வெற்றிலையின் ரகசியம் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? யாரும் அறியாத சூட்சமம்.

vetrilai-cash

வெற்றியை தருவது வெற்றிலை. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த வெற்றியையும் தாண்டி, நம் மனதில் நினைத்ததை நிறைவேற்றும் சக்தியும் இந்த வெற்றிலைக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? அதுமட்டுமல்ல இந்த வெற்றிலை கொடியானது நம் வீட்டு வாசலில் இருந்தால், எந்த விதமான கெட்ட சக்தியும் நம்மிடம் அண்டாது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். நமக்கு கெட்ட நேரம் வரும்போது நம் வீட்டு குலதெய்வம், நம் வீட்டிற்குள் வரும் அதிர்ஷ்ட தேவதைகளை எல்லாம், நல்லது செய்ய விடாமல் ஏதோ ஒரு கெட்ட சக்தியானது வந்து தடுக்கும். நமக்கு நல்லது செய்யவிடாமல் தடுக்க வரும் கெட்ட சக்திகளை அப்படியே தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய சக்தியும் இந்த வெற்றிலைக்கு உண்டு. அதாவது கெட்ட நேரத்திலும் நம்மை பாதுகாக்கக்கூடிய ஒரு நல்ல பொருள் தான் இந்த வெற்றிலை கொடி. ஆனால் வெற்றிலைக்கொடி இருக்கும் இடமானது மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். இந்த வெற்றிலை கொடியை வைத்து நம் மனதில் நினைத்த காரியத்தை சுலபமாக நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கு ஒரு சூட்சும வழி உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vetrilai

முதலில் இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், ஒரு வெற்றிலையின் மேல் பக்கத்தில் சந்தனத்தை நன்றாக குழைத்து பூசிக் கொள்ளுங்கள். சிறிதளவு குங்குமத்தையும், சந்தனம் பூசிய வெற்றிலையின் நடுவில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது வெற்றிலையில் உங்களின் மனதில் இருக்கும் வேண்டுதலை 15 முறை எழுதிக் கொள்ளவும். ‘நிறைய பணம் சேர்க்க வேண்டும்’ ‘குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ ‘குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும்’ ‘கணவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்’ ‘ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’. இப்படி எப்படிப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் சரி. வெற்றிலையின் முன்பக்கம் இடம் இல்லை என்றால் பின்பக்கமும் சேர்த்து எழுதிக் கொள்ளலாம்.

அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் துர்க்கையம்மன் படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்தால் இனிப்பு பிரசாதம் ஏதாவது செய்து நெய்வேதியமாக வைக்கலாம். முடியாதவர்கள் பழங்களை நைவேத்தியமாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக தயார் செய்து வைத்திருக்கும் இரண்டு வெற்றிகளைகளையும் துர்கை அம்மன் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு, உங்களுக்கு தெரிந்த துர்க்கை மந்திரம் எதுவாக இருந்தாலும் சொல்லலாம். தெரியாதவர்கள் ‘ஓம் துர்கா தேவியே நமஹ’ என்ற மந்திரத்தை 46 முறை உச்சரியுங்கள். அதன்பின்பு நீங்கள் உங்களுக்காக வேண்டுதல் வைத்திருந்தால், வெற்றிலையில் இருக்கும் குங்குமத்தை சிறிதளவு எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் என்று நன்றாக மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் யாருக்காவது, அதாவது உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக வேண்டிக் கொண்டிருந்தால் அந்த குங்குமத்தை எடுத்து அவர்களின் நெற்றியில் வைத்து விடுங்கள். நம் மனதில் இருக்கும் நல்ல வேண்டுதலை துர்க்கையம்மன் இடம் கூறி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு நல்ல வழிபாடுதான் இது. தவறான காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது. குங்குமம் தீரும்வரை குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். உங்களது வேண்டுதல் எழுதி இருக்கும் வெற்றிலையை யாருக்கும் தெரியாமல் ஓடும் ஆற்றில் போட்டு விடுங்கள்.

durga

இதில் எந்த ஒரு மந்திரமும் இல்லை. துர்க்கை அம்மனிடம் உங்கள் வேண்டுதலை வைக்கும் வழிபாட்டு முறை மட்டும்தான். ஹனுமனுக்கு மிகவும் பிடித்த இந்த வெற்றிலையை வைத்து தவறான செயல்பாட்டில் யாராலும் ஈடுபட முடியாது என்பது உறுதி. வெற்றிலையை வைத்து செய்யப்படும் பரிகாரத்தின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்பது உறுதி. அதாவது மனதில் நினைத்த விருப்பம் நிறைவேறும் என்று பேப்பரில் எழுதி, கட்டி இறைவனுக்கு மாலை அணிவிப்பது போல இதுவும் ஒரு நம்பிக்கையான பரிகாரம் தான். நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பார்த்தால் நிச்சயமாக பலன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்? எப்படி வைக்கலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vetrilai ragasiyam in Tamil. Vetrilai. Vetrilai nanmaigal Tamil. Vetrilai pariharam in tamil. Vetrilai pariharam Tamil.