அதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்? எப்படி வைக்கலாம்?

arasa ilai lord ganesha

ஒரு சில பொருட்களுக்கு இந்த உலகத்தில் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் தன்மையுள்ளது என்பதை ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சில விஷயங்களை சொன்னால் நம்பும்படியாக இருக்காது. ஆனால் அந்தப் பரிகாரத்தை செய்து பார்ப்பதன் மூலம் ஒரு விதமான வித்தியாசமான உணர்ச்சியை நீங்களே உணர்வீர்கள். பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் தன்மை பஞ்சபூதங்களுக்கு உண்டு. அதில் குறிப்பாக நீருக்கு அதன் தன்மை அதிகமாக உள்ளது. நம்மை சுற்றி ஒரு ஈர்ப்பு சக்தி கண்களுக்கு புலப்படாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். அதன் தாக்கம் நம்மை சுற்றியுள்ள பொருட்களை பொறுத்து வேறுபடும். ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல் ஒரு சில பொருட்களுக்கு நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இருப்பதும் உண்மையே. எந்த பொருட்களை எங்கு? எப்படி? வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

silver fish

முதலாவதாக வெள்ளியிலான மீன் உருவத்தில் இருக்கும் இரு ஜோடிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த உலோகத்தாலான மீனுக்கு பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் தன்மை உண்டு. இதனை ஜோடியாக தலையணைக்கடியில் வைத்து உறங்கும்போது உங்களிடமிருக்கும் நேர்மறை சக்திகளை சேகரித்து பல மடங்காக பெருக்கித் தரும். அதே போல் எதிர் மறை சக்திகளை விலக்கித் தரும்.

மேலும் இதே போல் விரலி மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்களின் தலையணைக்கடியில் வைப்பதால் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தீராத பிரச்சினைகள் தீர்ந்து நேர்மறை எண்ணங்கள் வளரும். குடும்பத்தில் செல்வ வளம் பெருகும். லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

coins

புதிய ரூபாய் நாணயங்களில் ஒன்று, இரண்டு, ஐந்து நாணயங்களை மட்டும் தலையணை அடியில் வைத்து தூங்கினால் பிரபஞ்சத்தின் சக்தியை ஈர்த்து செல்வ வளத்தை பெருகச் செய்யும். பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது நாணயங்கள். அதனால்தான் எல்லா சுபகாரியங்களுக்கும் நாணயங்களை பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற ஏராளமான சூட்சமங்கள் இருக்கின்றன. செயல்படுத்துவதால் மட்டுமே அதன் சக்தியை உணரலாம்.

- Advertisement -

அரச மர இலையை பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பார்கள். அரச மர இலைக்கு ஆன்மீகத்தில் தனித்தன்மை உண்டு. தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு அரச மர இலையை தலையணை அடியில் வைத்து தூங்கலாம். அதிக வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த இலை செயல்படும் என்கிறார்கள். வியாபாரத் தளங்களில் அரச இலையை வைக்கலாம்.

blue sapphire

இரும்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி தங்களின் படுக்கைக்கு அருகில் அல்லது கட்டிலுக்கு அடியில் வைப்பதால் சனி பகவானின் ஆதிக்கம் குறையும். திருமண பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. நீலக் கல் பதித்த மோதிரத்தை தலையணை அடியில் வைத்து தூங்கினால் சனியின் கெடுபலன்கள் குறையும்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி இதேபோல் வைப்பதால் இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் குறையும். முன் கோபக்காரர்கள் சாந்தமாக காணப்படுவார்கள். தங்களின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நல்ல வழியை நோக்கி பயணிக்கச் செய்யும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

red sandle wood

பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதால் தன்னம்பிக்கை அதிகரித்து எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக மாற்றித் தரும். குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான பாதையை நோக்கி பயணிக்க செய்யும். ஆரோக்கியம் சீராகும்.

சிவப்பு நிறத்தால் ஆன சந்தன கட்டையை தலையணை அடியில் வைத்து தூங்குவதால் சூரியன் மற்றும் சனி பகவானின் மூலம் நடைபெறக்கூடிய நல்ல விஷயங்கள் நடைபெறும். பிரபஞ்ச சக்தியில் சூரியனை ஈர்க்கும் தன்மை சந்தனக் கட்டைக்கு உண்டு.

silver-bracelet

வெள்ளி அல்லது தங்கத்தால் ஆன ஏதேனும் சிறிய ஆபரணங்களை அல்லது பொருட்களை தலையணை அடியில் வைத்து தூங்குவதால் ஜாதகத்தில் இருக்கும் மங்கள தோஷம் எனப்படும் சுபகாரிய தடை ஏற்படுத்தும் தோஷங்கள் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.

வெள்ளிப் பாத்திரத்தில் நீர் நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைப்பதால் எதிர் மறை எண்ணங்கள் நீங்கும். மற்றவர்களைப் போல் நம்மால் இருக்க முடியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மை நீங்கும். புதிய புத்துணர்ச்சியை உணர்வீர்கள். தோல்வியை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றிய காட்டுவீர்கள்.

silver bowl with water

இதை அனைத்தையும் அனைவரும் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ! அந்தப் பிரச்சினைக்கு ஏற்ப பரிகாரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உங்களின் பிரச்சனைகளுக்கு தகுந்த உலோகங்களை தேர்ந்தெடுத்து பரிகாரங்களை செய்து பலன் பெறலாம். எதையும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் நீங்கள் ஆழமாக என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்களின் வாழ்க்கையில் செயல்வடிவம் பெறும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட வேண்டுமா? இந்த குறிப்புகளை பின்பற்றி தான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Athirstam vara Tamil. Athirstam. Athirstam in Tamil. Athirstam peruga Tamil.